அவதாரம்
எடுக்காத சதாசிவம்,தனது மனதில் வைத்திருந்த அக்னிக்குஞ்சுக்கு
ஆணையிட,அந்தகாசுரனை அழிக்க உதயமானவரே ஸ்ரீகாலபைரவர் ஆவார். தமிழ்நாட்டில்
எட்டு இடங்களில் ஸ்ரீகாலபைரவர் திருவிளையாடல்கள் புரிந்திருக்கிறார்.அந்த
எட்டு இடங்களில் ஸ்ரீகாலபைரவர் சிவலிங்க வடிவத்தில் அருட்பேரரசு புரிந்து
வருகிறார்.இந்த
எட்டு இடங்களுமே அட்டவீரட்டானம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.இந்த
அட்டவீரட்டானங்களின்
இருப்பிடம் பற்றி ஏற்கனவே நாம் நமது ஆன்மீகக்கடலில்
எழுதியிருந்தோம்;தற்போது,இந்த இடங்களுக்குச்
சென்று,இந்த ஸ்தலங்களின் மகிமைகளை விசாரித்துப் பார்த்தால்,மறக்கப்பட்ட
ஸ்ரீகாலபைரவரின்
பெருமைகள் இமயமலையளவுக்கு கிடைத்திருக்கின்றன.நமது ஆன்மீக வரலாற்றிலும் பல
ரகசியங்கள்
வேண்டுமென்றே மறைக்கப்பட்டிருக்கின்றன;திரிக்கப்பட்டிருக்கின்றன;குழப்பத்தை
உருவாக்கி,உண்மைகள்
மறைக்கப்பட்டிருக்கின்றன.
நாம்
வைவஸ்தவ மன்வந்திரத்தில்,இருபத்து நான்காவது மகாயுகத்தில் இருக்கும்
நான்காவது யுகமான கலியுகத்தில் ஐந்தாயிரத்து நூற்றிப்பதிமூன்றாம் ஆண்டில்
வசித்து வருகிறோம்..(இந்துக் காலக் கணக்கினை
எந்த ஒரு மேல்நாட்டினராலும் புரிந்து கொள்ளவே முடியாது;இந்துக் காலக்
கணக்கு எந்த ஒரு
தனி மனிதனின் பிறப்பையும் மையப்படுத்தாமல்,ஸ்ரீகால பைரவரின் மூச்சை
கணக்கிட்டு மதிப்பிடப்படுகிறது.வெறும்
2000 ஆண்டு வரலாறு கொண்ட மேல்நாட்டினரால் இந்துக்
காலக்கணக்கின் பரிணாமத்தை புரிந்துகொள்ளவே
முடியாது)இந்த கலியுகத்தில் நாம்
பணத்துக்காகவே வாழ்கிறோம்;அல்லது காமத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி/அல்லது
காம ஆயுதத்தினால் தாக்கப்பட்டு
வாழ்ந்துவருகிறோம்.இவ்வளவு ஆழமாக ஆன்மீகத்தை ஆராய்ச்சி செய்து அதைப்
பின்பற்றுபவர்கள்
ஒட்டு மொத்த உலகத்திலும் பத்து லட்சம் பேர்கள் இருந்தால் அதுவே
அதிகம்!!!நம்மை ஆட்டிப் படைப்பது பணத்தாசை அல்லது காம அலைகளே! இதிலிருந்து
நீங்கள் தப்பிக்கவே ஸ்ரீகாலபைரவர்
வழிபாட்டையும்,ஓம்சிவசிவஓம் ஜபத்தையும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர்
வழிபாட்டையும் பின்பற்ற
வலியுறுத்துகிறோம்.
ஏறுடன் ஏழு அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக்கொண்டு
ஆறுடைச் சடையினானை அருச்சித்தான் அடியிணைக்கீழ்
வேறுமோர் பூக்குறைய மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
கூறுமோர் ஆழி ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே(அப்பர்)
காமன் செயல் அழித்து அங்கண்
அருந்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே(திருமந்திரம்)
முக்கண் முழுமுதலின் நெற்றிக்கண் தீப்பொறியால் மகாவிஷ்ணுவின் மகன் மன்மதன்
அழகிய உடல் எரிந்து சாம்பலாய்க் குறுகியதால் குறுக்கை என்று பெயர் பெற்றது என்பதை திருமந்திரமாக
திருமூலர் தெரிவிக்கிறார்.
இராமன் வனவாசம் இருந்த காலங்களில் வருடந்தோறும் தந்தைக்கு திவசம் செய்து
பித்ரு கடன் நிறைவேற்றி வழிபட்ட பல தலங்களில் கொறுக்கையும் ஒன்று.
மன்மதன் எரிந்து சாம்பலாகி விழுந்த இடம் கொறுக்கைக்கு அருகில் விபூதிக்குட்டை
என்று வழங்கப்படுகிறது.
கணவன்
இறந்துபட்டு உடலும் எஞ்சாமல் முழுவதும் எரிந்து சாம்பலானதைக் கண்ட
ரதிதேவி சிவபூஜையால் சாதிக்கமுடியாதது எதுவும் இல்லை என்பதை உணர்ந்து பல
தலங்களையும்
வழிபட்டு இறுதியாக திருக்கொறுக்கையை அடைந்தாள்.குளம் ஒன்றை உண்டாக்கி
கடுக்காய் மரத்தடியில்
லிங்கப் பரம்பொருளைப் பிரதிட்டை செய்து,பூஜித்தாள்.புத்திரசோகத்தால்
வருந்திய மகாவிஷ்ணுவும்,மஹாலட்சுமியும்
திருக்குறுக்கையை அடைந்து ரதிதேவியுடன் சேர்ந்து பரம்பொருளை
பூஜித்தனர்.எல்லையில்லா
கருணை காட்டும் கருணாகரனாகிய சதாசிவம் மன்மதனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து
வாழ்வளித்தார்.மீண்டும் உயிர் பெற்ற மன்மதன் தனது மனனவியாகிய ரதிக்கு
மட்டுமே
தெரியும் விதமாகவும் வரமளிருனார்.
உடம்பு இழந்து அநங்கனாய மன்மதன்(சம்பந்தர்)
மஹாவிஷ்ணு,மஹாலட்சுமி,ரதி ஆகிய மூவரின் சோகங்களையும் நீக்கியதால் கொறுக்கை
ஈசனுக்கு சோக ஹரேஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது.கொறுக்கையின் ஸ்தலவிருட்சம் கடுக்காய்
மரம் ஆகும்.
அடிமுடி காண்பர் அயன் மால் இருவர்
படிகண்டிலர் மீண்டும் பார் மிசைக்
கூடி
அடிகண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடி கண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே
என்று திருமந்திர ஆகமம் காட்டுகிறது.பொய் பேசிய பாவத்தினால் பிரம்மர்களுக்கு
பூவுலகில் திருவுருவமும் பூஜையும் இல்லாமல் போயிற்று.பல ஊழிகளுக்குப்பிறகு, பிரம்ம
பதவியில் இருந்த ஒரு பிரம்மன் திருக்குறுக்கை வீரட்டேஸ்வரரைப் பூஜித்து வழிபட்டார்.வழிபடுவோர்களின்
விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் உலகநாதன் பிரம்மன் உருவம் சிவாலயங்களில் இருக்குமாறு
வரம் அருளினார்.
கொறுக்கையானது மயிலாடுதுறைக்கு அருகில் சாலைப்போக்குவரத்திலிருந்து விலகி
அமைந்திருக்கிறது.யாருக்குப் பூர்வ புண்ணியமும்,ஸ்ரீகாலபைரவரின் அருளாசியும் இருக்கிறதோ
அவர் மட்டுமே இந்தக் கோவிலுக்குச் செல்ல முடியும்.தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு
இந்த ஆலயத்துக்கு வருகை தந்து இவரை வழிபட நமது முன்னோர்களின் 71 தலைமுறைகளாக சுமார் 20,000 தம்பதியரின்
பெண்சாபமானது விலகும் என்பது உறுதி.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
No comments:
Post a Comment