முற்பிறவிகளில் அளவற்ற தான தர்மங்களைச் செய்தவர்கள் இப்பிறவியில் அனுஷம்
நட்சத்திரத்தில் பிறப்பார்கள்.முற்பிறவியில் சிறிது பூர்வபுண்ணியம் சேர்த்தவர்களும்
இப்பிறவியில் தகுந்த ஆன்மீக குருவை அடைவது அனுஷத்தில் பிறந்தவர்களே!
ராமாயண காலத்தில்,வாலிக்குப் பயந்து சுக்ரீவன் தென்குரங்காடு துறையில்
தஞ்சம் புகுந்தான்.தன்னைக் காத்து அருளும்படி இங்கே வீற்றிருக்கும் சிவனிடம் வேண்டினான்.அவனது
பக்திக்கு இரங்கிய சிவபெருமான் சுக்ரீவனை அன்னப் பறவையாக மாற்றி ஆபத்திலிருந்து காப்பாற்றினார்.எனவே,இத்தலத்தின்
பெருமான் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.சகாயம் என்ற பெயர் இடும் பழக்கம்
இங்கிருந்தே உலகம் முழுவதும் பரவியது;சுக்ரீவன் வழிபட்டதால் இந்த தலத்திற்கு குரங்காடு
துறை என்ற பெயர் உண்டானது.காவிரியின் தென்கரையில் இத்தலம் அமைந்ததால் தென் குரங்காடு
துறை என்று மாறியது.
அகத்தியர் இந்த தலத்தில் சுவர்ண பைரவர் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்து
வழிபட்டார்.அதனாலேயே பல வரங்களைப் பெற்றார்.அவருக்கு ஈசன் நடனகோலம் காட்டியருளினார்.சுவர்ணபைரவர்
இங்கே சக்தி வாய்ந்தவராக அருள்பாலித்துவருகிறார்.
திருக்கையிலாய மலையில் மனமுருகி இசையுடன் பாடிக் கொண்டிருந்தார் அனுமன்.சைவ
அனுமன் என்று ஒருவர் உண்டு.அவ்வழியே வந்த நாரதர் அந்த இசையைக் கேட்டு மெய்மறந்து அமர்ந்துவிட்டார்.பின்னர்,அங்கிருந்து
புறப்பட்ட சமயத்தில் அவர் கீழே வைத்திருந்த ‘மஹதி’ என்ற வீணை மீது பனி உறைந்துவிட்டது.இதனால்,ஆத்திரப்பட்ட
நாரதர் நீ உன் இசையை மறப்பாய் என்று சைவ அனுமனைச் சபித்தார்.இந்த சாபத்தால் மனம் வருந்திய
சைவஅனுமன் சுக்ரீவன் வழிபட்ட இத்தலம் வந்து ஆபத்சகாயேஸ்வரரை மனமுருகி பல ஆண்டுகள் வழிபட்டார்.இதன்மூலமாக
மறந்து போன இசைஞானம் திரும்பக் கிடைத்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் தாலுகாவில் கும்பகோணம் டூ மயிலாடுதுறை
சாலை மார்க்கத்தில் ஆடுதுறையில் ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாதம் ஒருமுறை(சில சமயம் இருமுறை)
வரும் தனது ஜன்ம நட்சத்திர நாளில் இங்கே வர வேண்டும்;ராகு காலத்துக்கு முந்தைய முகூர்த்தத்தில்
மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்;பிறகு,ராகு காலத்தில் இங்கே அமைந்திருக்கும்
சொர்ண பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அவ்வாறு அபிஷேகம் செய்யும்போது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண
பைரவர் 108 போற்றியைப் பாட வேண்டும்.அல்லது துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீசொர்ண பைரவ
அஷ்டகத்தைப்பாடலாம். இவ்வாறு தொடர்ந்து 6 ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு செய்து வர இறையருளும்,குருவருளும்,பைரவ
அருளும் சித்திக்கும்.
இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்
அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருப்பத்தூர் டூ புதுக்கோட்டை மார்க்கத்தில்
அமைந்திருக்கும் தபசுமலையில் இருக்கும் சுவர்ண பைரவரையும் வழிபடலாம்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
No comments:
Post a Comment