ஸ்ரீகால பைரவர் சிவலிங்க வடிவில் இருந்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சி புரிந்து
வரும் இடங்கள் அட்டவீரட்டத்தலங்கள் எனப்படும்.இவைகளை நாம் தரிசிக்க விரும்பினாலும்,நமது
பூர்வகர்மாக்கள் சிலருக்குத் தடுக்கும்;அந்த பூர்வக் கர்மாக்கள் விலகி,அட்டவீரட்டத்தலங்களை
தங்கு தடையின்றி தரிசிக்க இந்த துதியை தினமும் ஒன்பதுமுறை வாசித்து வரவும்;அவ்வாறு
வாசித்து வந்தால்,நிச்சயமாக நீங்கள் அட்டவீரட்டானங்களுக்குப் பயணிக்க முடியும்.
இந்த அட்டவீரட்டானங்களையும் தரிசிக்க நான்கு நாட்களாகும்;இந்த அட்டவீரட்டானங்களையும்
ஒரே ஒருமுறை தரிசித்தப் பின்னர்,நீங்கள் இதுவரை எத்தனை முறை மனிதப் பிறப்பெடுத்தீர்கள்?
என்கிற படைப்பின் ரகசியத்தை உணருவீர்கள்;எந்தெந்த மனிதப் பிறவிகளில் என்னென்ன புண்ணியச்
செயல்கள் செய்தீர்கள்? என்னென்ன பாவவினைகளைச் செய்தீர்கள்? என்பதையும் அறிந்து கொள்வீர்கள்.
தங்களது முந்தைய அனைத்து முற்பிறப்புகளையும் நீங்கள் அறிந்தால்,அதன்
பிறகு உங்களுக்கு என்ன தோன்றும்?
திருக்கோயிலூர்,திருக்கடையூர்,திருவதிகை,திருக்கண்டியூர் இவைகள் மட்டுமே
அதிக பக்தர்கள் வரும் பிரதான இடத்தில் அமைந்திருக்கிறது.பிற வீரட்டானங்கள் பிரதான சாலையில் இருந்து விலகியே இருக்கின்றன. அட்டவீரட்டத் துதி:
சீரெட்டுத் திசையிலும் சிறப்புற சிவன் திருப்
பேரொலிக்கும் திருத்தலம் பலப்பல பாரில்
வீரட்டத் தலங்கள் எனப்பேர் விளங்க
ஓரெட்டுச் சிவத்தலம் ஓங்கும் புகழில்
மறப்பினை நீக்கி நினைந்திடும் அடியார்
பிறப்பினை நீக்கும் பிறப்பிலி பொலியும்
குறுக்கை கடவூர் கண்டியூர் கோவலூர்
பறியலூர் வழுவூர் விற்குடி அதிகை
வந்துவில் வளைத்து மலர்க்கணை விடுத்த
இந்திரன் ஏவிய திருமால் மைந்தன்
கந்தன் பிறந்த கண்ணின் பொறியால்
வெந்துச் சாம்பலாய் விழுந்தது குறுக்கையில்
ஆக்கமும் அழிவும் இல்லா இறைவனை
வாக்குமன உடலால் வழிபடும் பாலனைப்
போக்கிடும் காலனை நீக்கிடத் தில்லையில்
தூக்கிய திருவடி தழைந்தது கடவூரில்
அரிஅயன் ருத்திரன் மூவரும் வழிபடும்
பெரியனை மறந்து பரமன் யான் எனும்
சிரமைந்து நான்காய் நிலைக்க பைரவர்
விரல்நகம் கிள்ளிக் களையும் கண்டியூரில்
ஐந்தொழில் இறைவிழி அம்மை மறைக்க
வையகம் இருளும் ஒளிதரும் நுதற்கண்
மையிருள் வந்த அசுரன் வதங்க
வைத்துச் சூலத்தில் கோர்த்தது கோவலூரில்
சிவம்அது நீங்கின் அனைத்தும் சவம் எனும்
உண்மையை உணராத் தக்கன் வேள்வி
அவியத் தேவர் திசைதிசை ஓடித்
தவித்திடப் பாவம் தீர்ந்தது பறியலூரில்
ஆண்பெண் அலியெனும் தூணின் அடிமுடி
காணார் மால் அயன் கடுவல் அசுர
யானை உரித்துக் கருந்தோல் செந்நிற
மேனியில் முன்னவன் போர்க்கும் வழுவூரில்
அருவமும் உருவமும் ஆகும் பரமன்
பெருவிரல் கீறிய சிறுநில வட்டம்
இருகரம் சேர்த்து எடுத்த சலந்தரன்
பெரு உடல் ஆழியாய்ப் பிளக்கும் விற்குடியில்
உறவும் பகையும் இல்லா ஒருவன்
பறக்கும் கோட்டை மூன்றும் அழியக்
குறுநகை செய்து அசுரரைக் காத்து
பெரும்பணி புரியப் பணித்திடும் அதிகையில்
மண்ணில் கடவுளைக் கண்டசீர் அடியார்
பண்ணில் போற்றிப் பாடிய பெருமை
விண்ணவர் வியந்து வழிபடும் பழைமை
எண்பெரும் தலங்கள் இவற்றின் பெருமை
இயற்றியவர்:முனைவர் சிவப்பிரியா
ஓம் ஹ்ரீம் மஹாகால பைரவாய நமஹ
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் காலபைரவாய நமஹ
ஓம்சிவசிவஓம்
படத்தில் இருப்பது கும்பகோணம் மகாமகக்குளத்தின் அருகே ஒரு கோவிலுக்குள்ளே
எடுக்கப்பட்ட பாணலிங்கம்.இராமாயண காலத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வழிபட்ட பாண லிங்கம்
இது.ஆக,இந்த பாணலிங்கம் 17,50,000 ஆண்டுகளாக இருக்கிறது.முதல் யுகமான கிருதயுகத்தின்
முடிவில் ராமாயணச் சம்பவம் நிகழ்ந்தது;நாம் வாழ்வது நான்காவது யுகமான கலியுகத்தில் 5111 ஆம் ஆண்டு!!!
No comments:
Post a Comment