Monday, October 7, 2013

இளைஞரை பாதுகாக்கத் துவங்கிய ஸ்ரீகாலபைரவர் வழிபாடு!!!அந்த இளைஞர் பொறியியல் பட்டம் முடித்து வேலையில் சேர்ந்திருக்கிறார்.அவரது நிறுவனம் சென்னையில் இருக்கிறது.கடந்த ஒரு வருடமாக தினமும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்து வருபவர்.வீட்டின் மூத்த மகனாக இருப்பதால்,அவர் மீது அவரது குடும்பமே அவரை நம்பிக்கை நட்சத்திரமாக நம்புகிறது.இவரை படிக்க வைக்க இவரது அன்னை பல இடங்களிலும்,வங்கியிலும் கடன் வாங்கியிருக்கிறார்.அந்த கடன் தொகை ரூ.5,00,000/-ஐத்தாண்டும்.அடிக்கடி நேரடியாக எம்மை சந்திப்பார்.முன் அனுமதி பெற்று சந்திப்பதாலும்,மிகவும் கூர்மையான சந்தேகங்களை பல பரிமாணங்களில் கேட்பதாலும்,யாம் சொல்லும் ஜோதிட மற்றும் மனோதத்துவ ஆலோசனைகளை அவர் பின்பற்றுவதாலும்,அவர் வருகை தரும்போது மட்டும் ஒரு மணி நேரம் வரை யாரையும் சந்திப்பதுமில்லை;பேசுவதுமில்லை;போனை எடுப்பதுமில்லை;

கடந்த நான்கு வருடங்களாக எமது ஆலோசனையைப்பின்பற்றியதால் அந்த பொறியியல் கல்லூரி மாணவர் தனது மதிப்பை கல்லூரியிலும்,வேலையில் சேரும் போதும்,வேலையில் சேர்ந்த பின்னரும் பல மடங்கு உயர்த்திகொண்டார்.இத்தனைக்கும் அவர் எனது வயதில் பாதி!இந்த சூழ்நிலையில் அவர் சென்னையில் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வேறு ஒரு நிறுவனத்துக்கு மாறினார்.இப்போதெல்லாம் அவர் மாதம் இருமுறை பேசுவார்.சென்னைக்கு பணி நிமித்தமாக வாழ ஆரம்பித்தப்பின்னர்,அவரது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் நின்றுபோனது.ஆனால்,அசைவம் சாப்பிடாமல் இருப்பதில் உறுதியாக இருந்தார்.அவர் பணிபுரியும் நிறுவனத்தில் மது அருந்தும் பழக்கத்தை அவரிடமும் அறிமுகப்படுத்த முனைந்தனர் அவருடன் பணிபுரியும் சக ஊழியர்களும்,உயர் அதிகாரிகளும்! இவர் சிக்காமல் இருந்து கொண்டார்.(அவருக்கு மதுவினால் ஏற்படும் பின்விளைவுகளை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு நேரடியாக புரியவைத்தோம்;மேலும் அதில் சிக்காமல்  இருக்கும் டெக்னிக்குகளையும் பயிற்றுவித்தோம்)


இந்த சூழலில்,அவருக்கு அவரது பிறந்த ஜாதகப்படி செவ்வாய் மஹா திசை நிறைவடைந்து இராகு மஹாதிசை துவங்கிட இன்னும்  ஒரு மாதம் இருக்கிறது என்பதை நினைவூட்டிக்கொண்டே இருந்தோம்.இராகுவின் மஹாத்மீயம் அவருக்கு நன்றாகவே தெரியும்.இராகு பகவான் தனது திசைக் காலமான 18 ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்வார் என்பதை நேரடியாகவே எம்மால் உணர்ந்திருந்தார்.எனவே, அந்த ஒரு மாதத்தில் தாம் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து வேலைக்குச் செல்லும் இடம் வரையிலும் ஏதாவது கோவில் இருக்கிறதா? என்பதை தேடி ஒரு வழியாக ஒரு பழமையான சிவாலயத்தைக் கண்டறிந்துவிட்டார்.தினமும் காலையில் வேலைக்குச் செல்லும் போது சில நிமிடங்களுக்கு ஸ்ரீகாலபைரவரை வழிபட்டுவிட்டுச் செல்வதை வழக்கமாக்கினார்.


நவக்கிரகங்களில் பாம்புக்கிரகங்களாக இராகுவும்,கேதுவும் இருக்கின்றன.அமுதத்தை உண்டதால் இராகுவும் கேதுவும் புராண காலத்தில் சாகவில்லை;இராகு பகவான் தலையும் கைகளும் கலந்த உருவம் ஆகும்.இதே வடிவத்தோடு திருநாகேஸ்வரத்துக்கு வருகை தந்து ஸ்ரீகாலபைரவரை பல ஆண்டுகளாக தினமும் வழிபட்டு நவக்கிரக பதவியைப்பெற்றார்.


17.10.2012 அன்று அந்த பொறியியல் பட்டதாரி இளைஞருக்கு இராகு மஹாதிசை ஆரம்பம் ஆகப் போகிறது.இவர் தினமும் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்து வந்ததால், 16.10.2012 அன்று அதிகாலையில் இவருக்கு ஒரு கனவு வந்தது.அதில், இவரை ஒரு நாய் துரத்துகிறது;இவர் ஓடுகிறார்;ஒரு கட்டத்தில் இவரால் ஓட முடியவில்லை;உடனே,அந்த நாயை எதிர்த்து சண்டை போடுகிறார்.அப்படி சண்டை போட்டும் கூட அவரது கையை அந்த நாய் கடித்து துண்டாக்கி,வாயில் கவ்விக்கொண்டு செல்கிறது;ஒரு கையை இழந்த அவர் ஓடோடிச் சென்று அந்த நாயின் கழுத்தைப்பிடித்து தனது (துண்டுபட்ட) கையை பிடுங்கிவிட்டார்.


இதற்கான விளக்கத்தை கேட்டார்:இராகு பகவான் செயல்படுவது நமது கைகள் மூலமாகத் தான்.ஸ்ரீகால பைரவரை அவர் வழிபட்டு வந்ததால்,பைரவ வடிவில்(நாய் உருவில்) வந்து ,அந்த இராகு பகவானின் தீய செயல்பாடுகளை மட்டும் நிறுத்திவிட்டார் என்பதை இந்த கனவு காட்டுகிறது.வெறும் ஒரு மாதத்திற்குள் ஸ்ரீகால பைரவர் அந்த இளைஞருக்கு அருள் பாலித்திருக்கிறார் எனில்,அவரது எளிமையையும்,ஆழ்ந்த அன்பையும் நாம் என்னவென்று சொல்வது?
இதே போல நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு நாய்  வந்து கடிக்கும் விதமாக பலருக்கும் கனவு வந்திருக்கிறது.அந்த கடியினால் பயந்து போய் அலறியவர்களும் உண்டு;யாரெல்லாம் ஸ்ரீகால பைரவர் வழிபாடு  தினமும் செய்கிறார்களோ,அவர்களுக்கு சில வாரங்கள்/மாதங்கள் கடந்தப்பின்னர் கனவில் வந்து நாய் கடிக்கும்;அன்று முதல் அவர்களை ஸ்ரீகால பைரவர் பாதுகாக்கத்துவங்கியிருக்கிறார் என்று அர்த்தம்.


ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டிற்கு இந்த மாதிரியான கனவு வராது;வேறு விதமான கனவுகள் காட்சியளிக்கும்.
ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்யாமல் சிலருக்கு கனவில் வந்து நாய் கடிப்பதும் உண்டு.அப்படி கனவு கண்டவர்களுக்கு ஸ்ரீகாலபைரவரின் ஆசி இயற்கையாகவே இருப்பதாக அர்த்தம்!


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment