Monday, October 7, 2013

ஏழரைச்சனி(விரையச்சனி,ஜன்மச்சனி,வாக்குச்சனி),அஷ்டமச்சனி மற்றும் கண்டச்சனியின் தாக்கத்தை நிறுத்தும் திருவிற்குடி வீரட்டான வழிபாடு!!!



ஸ்ரீகாலபைரவப் பெருமானின் திருவிளையாடல்கள் நாம் வாழும் பூமியில் எட்டு இடங்களில் நிகழ்ந்துள்ளன.அந்த எட்டு இடங்களையும் இப்பிறவியில் ஒருமுறை சென்று பார்ப்பவர்களுக்கு ஸ்ரீகாலபைரவப்பெருமானின் அருள் நிச்சயம் கிட்டும்.ஒரு நாளுக்கு இரண்டு வீரட்டானங்கள் வீதம் நான்கு நாட்களில் இந்த எட்டு வீரட்டானங்களுக்கும் சென்று வந்துவிட முடியும்.யார் நேர்மையாக வாழ்ந்து வருகிறார்களோ,யாருக்கு இந்தப் பிறவியிலேயே ஆன்மீக குரு கிடைப்பாரோ அவர்கள் மட்டுமே இந்த அட்டவீரட்டானங்களுக்கும் பயணித்து,ஸ்ரீகால பைரவப் பெருமானின் தரிசனத்தைப் பெற முடியும்.அவ்வாறு பெற்றப் பிறகு,அடுத்த சில மாதங்கள்/வருடங்களுக்குள் நாம் இதுவரை எத்தனை மனிதப் பிறவி எடுத்துள்ளோம்? எந்தெந்தப் பிறவியில் என்னென்ன தவறுகள் செய்ததால்,இப்பிறவியில் எந்த மாதிரியான பிரச்னைகள்,அவமானங்கள்,வேதனைகளைச் சந்திக்கிறோம் என்பதை பூடகமாக உணர முடியும்.
இந்த அட்டவீரட்டானங்களிலும் ஸ்ரீகாலபைரவப் பெருமான் சிவலிங்க வடிவில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.சதாசிவனும்,ஸ்ரீகால பைரவப் பெருமானும் ஒருவரே;இருவரும் வேறு வேறல்ல என்பதை உணர்த்தவே இவ்வாறு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.நாம் படிக்கும் புராணங்கள்,சிவன் தொடர்பான கர்ணபரம்பரைக் கதைகள் அனைத்திலும் சிவன் என்று குறிப்பிட்டிருக்கும்;அந்த இடத்தில் ஸ்ரீகால பைரவர் என்று நாம் அர்த்தப்படுத்திக் கொண்டால் ஸ்ரீகால பைரவப் பெருமானின் வீரதீர சாகசங்களைப் பற்றி நாம் முழுமையாக உணரலாம்;அப்படிப் பார்த்தால்,மதுரையில் நிகழ்ந்த 64 திருவிளையாடல்களும் ஸ்ரீகால பைரவப் பெருமான்,சிவனின் பெயரால் செய்திருக்கிறார் என்றுதானே அர்த்தம்!!!
திருவாரூரில் இருந்து நாகூர் செல்லும் சாலையில்  திருப்பயந்தங்குடி  என்னும் கிராமம் வரும்;அங்கே சென்று,திருவிற்குடி செல்லும் பாதையை விசாரித்துச் சென்றால், ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி ஆலயத்தை அடையலாம்.இங்கே,நகரப் பேருந்து வசதி இருப்பதாகத் தெரியவில்லை;எனவே,திருவாரூரில் இருந்து வாடகை வாகனத்தில் பயணிப்பது நன்று.இங்கே,ஸ்ரீகால பைரவப் பெருமான் சன்னதிக்கு அருகில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது;அந்த சிவலிங்கத்தின் எதிரே நமது ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயிக்கும் சனிபகவானும்,அவருக்கு அருகே அவரது குருவாகிய ஸ்ரீகாலபைரவப் பெருமானும் இருக்கிறார்கள்.இம்மாதிரியான முக்கோண அமைப்பு இந்த திருவிற்குடியில் மட்டுமே இருக்கிறது.உலகில் வேறு எந்த கோவிலிலும் இல்லை;
ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி இருப்பவர்கள்(16.12.2014 வரை விரையச்சனியின் தாக்கத்தில் இருக்கும் விருச்சிகராசியினர்,ஜன்மச்சனியின் தாக்கத்தில் இருக்கும் துலாம் ராசியினர்,வாக்குச் சனியின் துயரத்தில் இருக்கும் கன்னி ராசியினர்;அஷ்டமச்சனியின் பிடிக்குள் இருக்கும் மீனராசியினர்,கண்டச்சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் மேஷராசியினர்) இங்கே தொடர்ந்து எட்டு சனிக்கிழமை வந்து பின்வருமாறு வழிபட்டால்,சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
இங்கே முக்கோண முனைகளில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமான்,சனீஸ்வரன்,ஸ்ரீசிவலிங்கம்!!! இந்த இடத்தில் சனிக்கிழமை வரும் இராகு காலத்தில் சிவபெருமானுக்கு முதலிலும்,ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு இரண்டாவதாகவும்,சனீஸ்வரனுக்கு மூன்றாவதாகவும் அபிஷேகம் செய்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் செய்துவிட்டால்,சனியின் தாக்கங்களான விரையச்சனி,ஜன்மச்சனி,வாக்குச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி இராது;
தவிர,தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் இதே போல அபிஷேகம் செய்து வரலாம்.
இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment