Monday, October 7, 2013

வெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=3


ஆறு புதன்கிழமைகளின் மாலை நேரத்தில் ஸ்ரீகாலபைரவரின் அருளாற்றல் வெளிப்படுவதை தமது ஆத்மசக்தியால் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் கண்டறிந்து நமக்கு அந்த தேவ ரகசியத்தை ஆன்மீகக்கடல் மூலமாக அருளினார்.
அவ்வாறு அருளியதன் மூலமாக ஏராளமான வாசக,வாசகிகளின் பல வருடப் பிரச்னைகள் தீர்ந்தன;கடுமையான மன உளைச்சல்கள் விலகின;இது தொடர்பாக பல வாசக,வாசகிகள் தொடர்ந்து அவரவர் அனுபவங்களை தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்;ஒரே ஒரு புதன் அல்லது இரண்டே இரண்டு புதன் கிழமைகள் என்று ஸ்ரீகாலபைரவரை வழிபட்டதாலேயே எப்படியெல்லாம் இருந்த தமது நீண்டகால பிரச்னைகள் தீர்ந்தன என்பதை விவரித்த வண்ணம் இருக்கின்றனர்.இந்தச் சம்பவம் உரிய வாசகரின் அனுமதியோடு வெளியிடப்படுகிறது:-
 அந்த பெற்றோர்களுக்கு ஐந்து குழந்தைகள்;இரு மகள்கள்,மூன்று மகன்கள்.நால்வருக்கும் திருமணம் ஆனப்பின்பு,மகள்கள் தத்தம் குடும்பத்தோடு வெளியூர்களில் வாழ்ந்து வருகிறார்.மூன்று சகோதரர்களில் ஒருவர் தான் நமது ஆன்மீகக்கடல் வாசகர்.தொடர்ந்து மூன்றுவீடுகளில் நடு வீடு இவருக்குக் கிடைத்தது;இவருக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது;இவரது வீட்டின் ஒரு பக்கம் இவரது அண்ணனும்,இன்னொரு பக்கம் இவரது தம்பியும் வசித்து வந்தனர்.பதினைந்து ஆண்டுகளாக வாழ்க்கை சொந்த வீட்டில் நகர்ந்தது.நரகமாக!
இவரது அண்ணனும்,தம்பியும் தினமும் குடிக்கும் பழக்கமுள்ளவர்கள். இவரது அண்ணன் மனைவியும்,தம்பி மனைவியும் இவர்களுக்கு கொடுத்த துன்பத்துக்கு அளவே கிடையாது;இவர்களின் குழந்தைகள் விளையாண்டால்,அவர்களைக் காரணமே இன்றி அடிப்பது;இவர்களின் தண்ணீர்க்குழாயை உடைப்பது;ப்ளாஸ்டிக் வாளிகளை உடைப்பது.எழுத்தில் வாசிப்பதை விடவும்,நேரில் உணர்ந்தவர்களுக்கே அந்த வலியும் வேதனையும் தெரியும்.இது போன்ற தொல்லைகளை சொந்த உறவுகளே செய்யும் போது ஏன் தான் நாமெல்லாம் இவர்களோடு பிறந்தோம்? என்று தோன்றும்.நமது ஆன்மீகக்கடல் வாசகரோ வீண் வம்பு எதற்கு? சண்டைபோட்டால்,அவமானமாகிவிடுமே என்று அமைதியாகிவிடுவார்;
இதுதொடர்பாக இந்த சகோதரர்களோடு வாழ்ந்து வந்த இவரின் பெற்றோர்களிடம் புகார் செய்தும்,அவர்களின் பேச்சை இரு மருமகள்களும் மதிப்பதே இல்லை;ஒரு கட்டத்தில் இவரது பெற்றோரை மருமகள்களில் ஒருத்தி அடித்து நொறுக்கிவிட அவர்கள் அந்த நள்ளிரவிலும்,தனது உடல்நிலை மோசமாக இருந்த சூழ்நிலையிலும் தனது மகளின் வீட்டுக்குப் புறப்பட்டுப் போய்விட்டனர்;அவர்கள் போன அடுத்த சில வாரங்களில் இவரையும் சண்டையிட்டு வெளியேற்றிவிட்டனர்.சொந்த வீடு இருந்தும்,வாடகை வீட்டிற்கு குடியேறுவது எவ்வளவு வேதனையானது?!!
காரணம் நமது வாசகரின் சகோதரர்களின் மனைவிகள் பில்லி ஏவல் சூனியம் வைப்பதை ஒரு சுபாவமாகவே கொண்டவர்கள்.நிம்மதியின் மதிப்பு வார்த்தையில் அனைவருக்கும் புரியாது;பல ஆண்டுகளாக சிக்கல் மேல் சிக்கல்களைச் சந்தித்து,படாத அவமானமெல்லாம் பட்டவர்களுக்கு மட்டுமே அதன் மதிப்பை உணரமுடியும்.சுமாராக மூன்று ஆண்டுகளாக நமது ஆன்மீகக்கடல் வாசகர் தனது வீட்டை விற்க முயன்று கொண்டே இருக்கிறார்.இவரது சகோதரர்களின் திருவிளையாடல்களால் அது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தொடர்ந்து மூன்று புதன் கிழமைகளுக்கு அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்குச் சென்று ஸ்ரீகாலபைரவரை மாலை நேரத்தில் மனமுருகி பிரார்த்தனை செய்து,இரண்டு நெய்தீபங்கள்,செவ்வரளி மாலை,டயமண்டு கல்கண்டுகளுடன் வழிபட்டார் நமது ஆன்மீகக்கடல் வாசகர் குடும்பத்தோடு! மூன்றாவது புதன் கிழமை முடிந்த பத்தாவது நாள் இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் இவரது வீட்டை இவர் எதிர்பார்த்ததை விடவும் அதிக விலைக்கு வாங்கிவிட்டார்.
இப்பொழுது எங்கள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை பைரவருக்கு கோடானகோடி மனமார்ந்த நன்றிகள் .         தங்களுக்கும்    நன்றிகள்  ஐயா!!! 

No comments:

Post a Comment