ஆறு புதன்கிழமைகளின் மாலை நேரத்தில் ஸ்ரீகாலபைரவரின் அருளாற்றல் வெளிப்படுவதை
தமது ஆத்மசக்தியால் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் கண்டறிந்து நமக்கு அந்த தேவ
ரகசியத்தை ஆன்மீகக்கடல் மூலமாக அருளினார்.
அவ்வாறு
அருளியதன் மூலமாக ஏராளமான வாசக,வாசகிகளின் பல வருடப் பிரச்னைகள்
தீர்ந்தன;கடுமையான மன உளைச்சல்கள் விலகின;இது தொடர்பாக பல வாசக,வாசகிகள்
தொடர்ந்து
அவரவர் அனுபவங்களை தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்;ஒரே ஒரு புதன் அல்லது
இரண்டே
இரண்டு புதன் கிழமைகள் என்று ஸ்ரீகாலபைரவரை வழிபட்டதாலேயே எப்படியெல்லாம்
இருந்த தமது
நீண்டகால பிரச்னைகள் தீர்ந்தன என்பதை விவரித்த வண்ணம்
இருக்கின்றனர்.அவற்றில் ஒரே ஒரு சம்பவத்தை உரியவரின் அனுமதியோடு
வெளியிடுகிறோம்.
36 ஆண்டுகளுக்குப்பிறகு
பேசிய அப்பாவும்,மகனும்!!!
அவருக்கு 1977 ஆம் ஆண்டு திருமணம் நிகழ்ந்தது.தனது
பெற்றோரின் சம்மதத்தோடு,பெற்றோர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.இவரது
தலைத்தீபாவளிக்கு மறு நாளில் இருந்து,இவரிடம் இவர் அப்பா பேசுவதையே தவிர்த்தார்;
இவர் மூத்தவர் என்பதால்,இவருக்குப் பிறகு
தனது நான்கு சகோதரர்களுக்கும் உரிய வயதில் இவரே தகுந்த வரன் பார்த்து திருமணம் செய்து
வைத்தார்;தனது சொந்தச் செலவில்! இத்தனைக்கும் இவர்களின் குடும்பத்தில் சொத்துக்களுக்கு
குறைவில்லை;இருப்பினும்,தான் குடும்பத்தில் மூத்த மகன் என்ற பொறுப்பை சரியாக உணர்ந்தே
செயல்பட்டார்;ஒவ்வொரு தம்பியின் திருமணத்தை முடித்து வைத்ததும்,தம்மிடம் தமது அப்பா
பேசுவார் என்று ஏங்குவார் மூத்தவர்.ஆனால்,அப்பா இவரைப் பார்த்து ஒரு புன்னகை கூட உதிர்க்க
மாட்டார்;
ஒவ்வொரு சகோதரனின் திருமணத்திற்கும் தனது
கடந்த சில ஆண்டுகள் சம்பாத்தியத்தை செலவழித்து வர,அடிக்கடி பொருளாதார நெருக்கடிக்கு
உள்ளானார்.கூடவே,இவரது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.இவரது மனைவியின்
சாமர்த்தியத்தால் குடும்பம் கடன் வாங்காமலேயே செயல்பட்டது.
நான்கு சகோதரர்களின் திருமணம் முடியும் வரையிலும்
அமைதி காத்த இரண்டாவது தம்பியின் மனைவி,சொத்தைப் பிரிப்பதில் யுத்தத்தைத் துவக்கினார்(அந்த
யுத்தத்தின் பின்னால்,இவரது தம்பி இருப்பதை யாரும் யூகிக்கவில்லை).ஒரே வருடத்தில் அனைவருக்கும்
சொத்துக்கள் மூத்தவரின் அறிவாற்றலால் முறையாகப் பிரிக்கப்பட்டன;முறையாகப் பிரிக்கப்பட்டது
கண்டு,இவரது அப்பாவுக்கு இவரது அறிவுசாதுரியத்தைக் கண்டு வியப்படையவில்லை;மாறாக பொறாமையே
பட்டார்;நமது பாரம்பரிய முறைப்படி சொத்துக்களைப் பிரித்தாலும்,இவரது பங்கினை இவரது
இரண்டாவது தம்பிக்குத் தரச் சொல்லி இவரது அப்பாவே இவரைக் கட்டாயப்படுத்தினார்.இவரும்
தனது அப்பாவின் பாசம் மட்டுமே போதும் என்று தனக்குரிய பங்கினை தனது தம்பிக்கு தாரை
வார்த்தார்;தம்பிக்குரிய பங்கினை மனதாரப் பெற்றுக் கொண்டார்;
இவரது அப்பா சில ஆண்டுகள் அமைதியாக இருந்தார்;அந்தக்
கால கட்டத்தில்,இவரது இரண்டாவது தம்பி அப்பாவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்
என்பதை மற்ற சகோதரர்கள் கண்டறிந்தனர்.
1990களில் வறட்சியின் விளைவாக விவசாயம் நட்டத்தைத்
தரத் துவங்கியது;எனவே,தனது அண்ணனின் மதிப்பைச் சீர்குலைக்க ஒரு திட்டமிட்டார் இரண்டாவது
தம்பி;தனது அப்பாவின் பங்காக இருக்கும் விளைநிலத்தை அப்பாவே அண்ணனின் மேற்பார்வையில்
ஒப்படைக்க வைத்தார். “விவசாயத்தில் வரும் நட்டத்தால் அண்ணன் தனது சொத்தினை விற்க வேண்டி
வரும்;அப்பாவிடம் முறையாக கணக்கு ஒப்படைக்கவே படாத பாடு படவேண்டியிருக்கும்” என்ற மதிப்பிட்ட
இரண்டாவது தம்பி இப்படி செயல்படுத்தினார்.
மூத்தவரோ
நவீன மற்றும் இயற்கை விவசாய டெக்னிக்குகளைப்
பயன்படுத்தி அப்பாவின் விளைநிலத்திலும்,தனது விளைநிலத்திலும் இரு மடங்கு
சாகுபடியை
விளைவித்தார்.தனது கணக்கு பொய்த்தது கண்டு,அப்பாவின் விளைநிலத்தை தனது
நிர்வாகத்துக்கு
வரும் விதமாக மாற்றினார் இரண்டாவது தம்பி.(இரண்டாவது தம்பி, அப்பாவிடம்
சொன்னது: அப்பா,உங்கள்
நிலத்தில் எல்லாமே நஷ்டம்;ஆனால்,அண்ணன்,அவன் விளைச்சலை உங்களிடம் உங்கள்
பங்காகத் தருகிறான்;இதையெல்லாம் வேணும்ணே அண்ணன் செய்யுறான்=அப்பாவோ
நேரடியாகச் சென்று விளைநிலத்தை ஒரே ஒருமுறை போய் பார்க்கவே
இல்லை)அப்பாவுக்கும் மூத்த
அண்ணனுக்கும் இடையே இணைப்புப் பாலம் போல செயல்பட்ட இரண்டாவது தம்பி
இருவரையும் கிட்டத்தட்ட
பகையாளியாகவே ஆக்கிவிட்டார்.
யாரையுமே நம்பாத இவர்களின் அப்பா,தனது இரண்டாவது
மகனின் நடிப்பில் ஏமாந்துவிட்டார்;புகழ்ச்சிக்கு மயங்கும் மூத்தவர் தனது தம்பி சொல்வதெல்லாம்
உண்மை என்று நம்பிவிட்டார்;இந்த சதித்திட்டம் பற்றி இவரது மற்ற சகோதரர்கள் இவரிடம்
பலமுறை விளக்கியும்,இவர் தனது தம்பி அப்படிச் செய்வான் என்பதை நம்பவே இல்லை;இருப்பினும்,தமது
அப்பா இப்படி மனம் மாறக் காரணம் என்ன? என்று பல ஆண்டுகளாக யோசித்திருக்கிறார்.விடை
கிடைக்கவில்லை;அப்பாவிடம் நேரில் சென்று ஒரே ஒருமுறை மனம் விட்டுப் பேசியிருந்தால்
தமது தம்பியின் நயவஞ்சகம் புரிந்திருக்கும்;
இந்த சூழ்நிலையில் மூத்தவரின் அனைத்து குழந்தைகளுக்கும்
திருமணம் ஆகி,அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து,அவர்களும் திருமண வயதை எட்டிவிட்டனர்.
நமது ஆன்மீகக்கடலை வாசித்த இவரது இல்லத்தரசி,இரண்டே
இரண்டு புதன் கிழமைகள் ஸ்ரீகால பைரவர் வழிபாட்டை முறையாக செய்து முடித்திருக்கிறார்.மறுநாளே,இவரை
இவரது அப்பா நேரில் வரச் சொல்லி எப்படிப்பா இருக்குறே? என்று கேட்டிருக்கிறார்.
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமே? இவர்
தனது அப்பாவின் காலைக் கட்டிக் கொண்டு அழ,அவரோ ஒன்றும் புரியாமல் ஏண்டா என்னடா ஆச்சு
என்று கேட்க,வெகு நேரம் கழித்து ஏம்பா, என்னிடம் பேசவில்லை என்று கேட்க,நடந்த ஆரம்ப
காலச் சம்பவங்கள் 36 வருடங்கள் கழித்து நினைவிருக்குமா?
தமிழ்நாட்டின் மக்கள் இரண்டே இரண்டு விதமாகத்
தான் இருக்கிறார்கள்.
எல்லோரையும் நம்ப வைப்பதில் கில்லாடியாக இருந்து,தனது காரியத்தை
கச்சிதமாகச் செயல்படுத்தும் சகுனிகள்!! எல்லோரிடமும் தனது இயல்பு குணத்தோடு இருந்து
யாருடைய ஆதரவையும் பெற முடியாமல் தவிக்கும் அப்பாவி+நேர்மையாளர்கள்!!!
சகுனிகள் தனது மனைவி,மகன்,மகள் என எல்லோரிடமும்
எப்போதும் நடித்துக் கொண்டே இருப்பார்கள்;இவர்களைப் பற்றி ஒரே ஒரு குறை கூட வெளியே
தெரியாது;குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்வது போல காட்டிக் கொள்வார்கள்;ஆனால்,இவர்களைப்
போல சுயநலவாதிகளை எந்த நாட்டிலும் பார்க்க முடியாது;தனது காரியம் வெற்றியடைய உடன் பிறந்தவர்களுக்கே
பில்லி,சூனியம் வைப்பார்கள்;ஆனால்,இவர்களா இப்படியெல்லாம் செய்வார்கள்? என்று நம்ப
முடியாத அளவுக்கு நவீனமான ஆளாக தன்னைக் காட்டிக்கொள்வார்கள்;தனக்கு ஏதாவது ஒரு அவமானம்
ஏற்பட்டால் ,அதை வேறு யார்மீதாவது பழி சுமத்திவிடுவார்கள்;
அப்பாவி+நேர்மையாளர்கள் எல்லோரிடமும் உண்மையே
பேசுவார்கள்;இவர்களுக்கு பொறாமைப் படத்தெரியாது;தனது சாதனைகளை பிரபலப் படுத்திடத் தெரியாது;தனது
வேதனைகள்,அவமானங்களை மறைக்கவும் தெரியாது.இவர்கள் மீது ஒரு தனிப்பெரும் மதிப்பு இராது;தேவைப்படும்
போது சிடுமூஞ்சிகளாகவும் இருப்பார்கள்;இவர்கள் பில்லி,ஏவல்,சூனியம் இவைகளை நம்பமாட்டார்கள்;தமது
நேர்மையே இவைகளிடமிருந்து பாதுகாக்கும் என்று அழுத்தமாக நம்புவார்கள்;யார் எதைக் கொடுத்தாலும்
வாங்கிச் சாப்பிடுவார்கள்;தம்மோடு பழகுபவர்களில் யார் நல்லவர்கள் போல நடிப்பவர்கள்,யார்
தம் மீது அக்கறையோடு இருப்பவர்கள் என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது.அப்படியே தெரிந்தாலும்,அவர்களைப்
பின்பற்றி தமது வாழ்க்கையை பாதுகாப்பாகவும்,சிறப்பாகவும்,வளமாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்
என்ற சுயநலம் சிறிதும் இராது;
No comments:
Post a Comment