Monday, October 7, 2013

ஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருளைப் பெற. . .அந்த வாசகருக்கு வயது 42.அவர் இந்த சேவை சார்ந்த தொழிலில் சுமாராக இருபது வருடங்களாக இருந்து வருகிறார்.இந்த சேவைத் தொழில் பற்றிய அத்தனை விபரங்களும் அவருக்கு அத்துப்படி! இந்தத் தொழிலில் ஆரம்ப வருடங்களில் போட்டி இல்லாமல் இருந்ததால் செமத்தியாக லாபம் சம்பாதித்தார்.தனது மூன்று மகள்களையும் நன்றாக படிக்க வைத்தார்;ஒவ்வொரு மகள்களும் விரும்பும் படிப்பிலேயே சேர்த்தார்.மிகவும் கஷ்டப்பட்டு சிறந்த வரன்களைத் தேடி மணம் முடித்தார்.
தற்போது அவரது தொழிலில் இறங்குமுகம் வந்துவிட்டது.யாராக இருந்தாலும்,எப்பேர்ப்பட்ட ஜாம்பவானாக இருந்தாலும்,எந்தத்  தொழிலில் இருந்தாலும் செய்யும் வேலை அல்லது தொழிலில் ஏறுமுகம் இருப்பது போல இறங்குமுகம் வரத்தான் செய்யும்.இருபத்தோரு வயது முதல் ஐம்பது வயதுக்குள் சம்பாதித்து தொழிலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.ஐம்பது வயதுக்குப் பிறகும் தொழிலில் சாதிக்கப்போகிறேன் என்று கடனாளி ஆகிவிடக்கூடாது.
ஒரு தொழிலில் இறங்கும் முன்பு அந்தத் தொழிலில் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் வேலை பார்த்திருக்க வேண்டும்.ஆனால்,ஏழரைச்சனி நடப்பவர்களுக்கு அப்போதுதான் சொந்தத் தொழில் செய்து அம்பானியாகவோ,பில்கேட்ஸாகவோ ஆக வேண்டும் என்ற வெறி வரும்;ஏழரைச்சனி நடைபெறும் போது சொந்தத் தொழில் ஆரம்பித்தால் கடனாளி ஆகி காணாமல் போவது நிச்சயம்.
அதே போல தினசரி ரூ.100/-மட்டுமாவது சேமித்துக் கொண்டே இருக்க வேண்டும்.அந்த சேமிப்பை எக்காரணம் கொண்டும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் செலவழித்துவிடக்கூடாது.இவ்வாறு சுமாராக இருபது முதல் ஐம்பது ஆண்டுகள் வரையிலும் சேமித்துக்கொண்டே வந்தால் தான் முதுமைக்காலம் நிம்மதியாக இருக்கும்.இதுவே பணக்காரர் ஆக குறுக்கு வழி.
எது கொடிய நரகம் தெரியுமா?

நமது முதுமைக்காலத்தில் நாம் நமது பணத்தேவைகளுக்காக பிறரைச் சார்ந்திருப்பதுதான்! இதைச் சொன்னவர் நம்ம சாணக்கியர்.
இந்த சூழ்நிலையில் அந்தப் பெரியவரிடம் ஒருவன் வேலைக்குச் சேர்ந்தான்;அவன் சொன்ன தொழில் ஆலோசனைகள் வருமானத்தைப் பெருக்கும் விதமாக இருந்தன;எனவே,அவனது பொறுப்பில் அந்த தொழில் ஆலோசனையை நடைமுறைப்படுத்தினார்;முதல் இரண்டு ஆலோசனைகள்  ஜெயித்தபடியால்,அந்த வேலையாளை முழுமையாக நம்பி மேலும் சில பொறுப்புகளை கொடுத்து,அவன் மீதான கண்காணிப்பை நிறுத்தினார்.ஒரே வருடத்தில் கடனே இல்லாமல் தொழில் செய்த அவர் கடனாளி ஆகிவிட்டார்.செல் எண்ணையும்,இருப்பிடத்தையும் மாற்றிய அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை;அவனை நம்பி கொடுத்த ஒரு வங்கிக் கணக்கையும் ஜீரோ பேலன்ஸுக்கு கொண்டு வந்துவிட்டு,ஓடியே போனான்.
அப்போது அவர் நமது ஆன்மீகக்கடல் வாசகராக இருந்தவர்,மைத்ர முகூர்த்தம் பற்றி அறிந்தார்.கூடவே,பைரவ மந்திரஜபத்தை தினமும் எழுதத் துவங்கினார்.
தினமும் 108 முறை பின்வருமாறு எழுதத் துவங்கினார்.
ஓம் அங்காளபரமேஸ்வரி நமஹ என்று ஒருமுறையும்,(இந்த அம்மா அவரது குலதெய்வம் ஆகும்.குலதெய்வத்தின் ஆசியோடுதான் ஸ்ரீகால பைரவ மந்திரத்தை எழுத வேண்டும்;குலதெய்வம் தெரியாதவர்கள் தனது இஷ்ட தெய்வத்தின் பெயரை எழுதலாம்)
ஓம் கணபதி நமஹ என்று ஒரு முறையும் எழுதிவிட்டு,
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று 108 முறை தினமும் எழுதிக்கொண்டே வந்தார். 
ஒரு நாள்,இருநாட்கள் அல்ல;தொடர்ந்து பதினொரு மாதங்கள் ஒரு நாள் விடாமல் இந்த மந்திரத்தை எழுதிக் கொண்டு வந்தார்.12 வது மாதத்தின் துவக்கத்தில் ‘அவன்’ ஒரு நிறுவனத்தில் மோசடி செய்து பிடிபட்டது தினசரி செய்தித்தாள்களின் மூலம் தெரியவந்தது.அவன் செய்த மோசடிகளைப் பொறுத்து,காவல் துறையே ‘இவனிடம் ஏமாந்தவர்கள் யாராக இருந்தாலும் வந்து புகார் செய்யலாம்’ என்று அறிவிப்பு வெளியிட்டது;இவரும் தம்மிடம் இருந்த ஆதாரங்களோடு சென்று புகார் செய்துவிட்டு வந்துவிட்டார்.தனது புகாருக்கு நிச்சயம் முழுப்பலன் கிட்டும் என்று அவர் நம்பிக்கையோடு சொன்னது இன்றும் எமது மனதில் தன்னம்பிக்கை கலந்த உற்சாகத்தை தந்திருக்கிறது.
அடுத்த சில நாட்களில் இவருக்கு இவரது கடன்களை முழுமையாகத் தீர்க்கும் விதமாக ஒரு ஒப்பந்தப்பணி உள்ளூர் நகராட்சியில் கிடைத்தது.அதுவும் யாரென்றே தெரியாத ஒரு நபரால் கிடைத்ததும்,தனது பதினோரு மாத அனுபவத்தை எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.அவர் எழுதிய நோட்டுகள்,காகிதங்கள் அனைத்தையும் நேரில் கொண்டு வந்து காட்டினார்;தேதி எழுதி,எழுதத்துவங்கிய நேரத்தையும் அவர் எழுதியதை பார்த்து மலைப்பே வந்துவிட்டது.ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு எழுதியிருக்கிறார்;இன்னொரு நாள் மதியம் 2.22க்கு எழுதியிருக்கிறார்;இன்னொரு நாள் நள்ளிரவு 1.30க்கும் எழுதியிருக்கிறார்.பிறிதொரு நாள் மாலை 5.10 மணிக்கும் எழுதியிருக்கிறார்.
அவரது பொறுமையும்,ஒரு நாள் கூட விடாமல் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதியதையும் நாம் மனதாரப் பாராட்டுவோம்;தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் வரும் ராகு கால நேரத்திலும்,பரணி நட்சத்திரம் வரும் நாட்களில் வரும் குரு ஓரையிலும்,திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் வரும் ராகு கால நேரத்திலும் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று ஸ்ரீகால பைரவப் பெருமானின் சன்னதியில் 108 முறை எழுதி வந்திருக்கிறார்;எழுதி முடித்தப் பின்னர் பைரவ சன்னதி பூசாரியிடம் சொல்லி தனது பெயருக்கும்,தனது நிறுவனத்தின் பெயருக்கும் ஒரு அர்ச்சனை செய்திருக்கிறார்.
நெருங்கிய உறவுகள் மறைவு வரும் போது கலந்து கொண்டால் மூன்று நாட்கள் மட்டும் எழுதாமல் இருந்திருக்கிறார்.
அதே சமயம் இவ்வாறு எழுதுவதை அவர் ரகசியமாக வைத்திருந்தார்.தற்போது அவர் சொன்னது: எம்மைப் போல தொழில் செய்து  கடனால் கஷ்டப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள்;எனவே,அவர்களுக்கு எனது அனுபவம் வழிகாட்டியாக இருக்கட்டும் 
என்ன,நாமும் அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டுவிட்டு,இதே போல தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று எழுதுவோமா?
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment