Thursday, October 3, 2013

ஸ்ரீபைரவரின் பிறந்தநாளே கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி
மும்மூர்த்திகளான அயன் என்ற பிரம்மா,மால் என்ற விஷ்ணு,ருத்ரன் இம்மூவர்களையும் நிர்வாகிப்பவரே சதாசிவன் என்ற அண்ணாமலையார்!!!


 சிவன் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை;தேவைப்படும்போது தனது சக்தியின் ஒரு பகுதியை அவதாரமாக அனுப்பி வைப்பார்;அப்படி அனுப்பப்பட்ட சக்திகளே ஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீவீரபத்திரர்,ஸ்ரீசரபேஸ்வரர்.இவர்களில் மிகமிகமிக உயர்ந்த அவதாரமும் முதல் அவதாரமும் ஸ்ரீகால பைரவப் பெருமானே!!!
கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியும் பரணி நட்சத்திரமும் கூடிய நன்னாளில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாலபைரவர் அவதரித்தார்;அவரே எட்டு பைரவ வடிவங்களாக பிரிந்து,பிரபஞ்சம் முழுவதும் பரவியிருந்த மருள் என்ற இருளை நீக்கிட அந்தகாசுரனை வதம் செய்தனர்;அந்த எட்டு பைரவர்களும் மனித நலன்களைக் கருதி 64 பைரவர்களாக மேலும் அவதரித்தனர்;

இன்றும் கோவிலில் வழிபடத் தக்கவர் ஸ்ரீகாலபைரவர்!!
வீட்டில் வழிபட ஏற்றவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்!!!இவரது போட்டோவை வீட்டில் வைத்து வழிபட விரும்புவோர்,எம்மிடம் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்,

மற்ற பைரவர்களை வழிபடக் கூடிய மனிதர்கள் காடுகளிலும்,வனங்களிலுமே இந்த கலியுகத்தில்  இருக்கிறார்கள்;பைரவப் புராணம் இதுவரைப் போதும்;

நாம் ஒருவரே நமது அப்பா,அம்மாவுக்கு மகன்/ளாக இருக்கிறோம்;நமது சகோதர/ரிக்கு சகோதரி/ரராகவும் இருக்கிறோம்;நமது மனைவி/கணவனுக்கு  கணவன்/மனைவியாக இருக்கிறோம்;நமது குழந்தைக்கு அப்பா/அம்மாவாக இருக்கிறோம்;அதே போல ஸ்ரீகாலபைரவரை வழிபட்டாலே நம் ஒவ்வொருவருக்குமே பின்வரும் நன்மைகள் மொத்தமாகக் கிடைக்கும்;
முதலில் நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த தவறுகள்,திமிர்த்தனத்தின் விளைவுகள்,பாவப்பதிவுகள்,ஏக்கங்கள்,அகம்பாவங்கள் அனைத்தையும் திரும்ப அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;சில சமயம்(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி காலத்தில்) அவை நம்மை,நமது தினசரி வாழ்க்கையை கடினப்படுத்திவிடும்;அப்போது நாம் சிந்திப்போம்;நமது சிந்தனை முறை,வாழும் விதம் பற்றிய மறுசீரமைப்புக்கு சந்தர்ப்பம் அமையும்;அப்படி அமைவதற்காகவே ஸ்ரீகால பைரவர் வழிபாட்டைப் பின்பற்ற வலியுறுத்துகிறோம்;
அவ்வாறு வழிபட்டுவருவதன்  மூலமாக,நமது கர்மவினைகள் நம்மை பாடாய்படுத்தினாலும்,நாம் மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும் நம்மை ஸ்ரீகாலபைரவர் கவசமாக பாதுகாப்பார்;
1994 முதல் இந்தியாவை ஆள்பவர்களால் இந்தியாவின் தனி மனித வருமானத்தைப் பெருக்க முயலவில்லை;இந்திய நிறுவனங்கள்,சிறுதொழில்கள் வளரும்விதமாக அரசாட்சி  புரியவில்லை;மாறாக மேல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் மிகப் பரந்த சந்தையை வேட்டையாட பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் அனுமதி அளித்துக் கொண்டே வந்துவிட்டன;விளைவு?


 இன்று கோடிக்கணக்கான சராசரி இந்தியக் குடும்பங்கள் நியாயமாக சம்பாதித்து(வேலை பார்த்தோ,தொழில் செய்தோ அல்லது பகுதி நேரமாக வேலை அல்லது தொழில் பார்த்தோ) மூன்று  வேளைகள் உணவு உண்ணமுடியவில்லை;(இதனால்,விபச்சாரம் இந்தியாவின் சமூக அங்கமாகிவிட்டது)தினமும் ஏதாவது ஒரு விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்கிறது;ஆனால்,சம்பளம் அதே விகிதாச்சாரத்தில் உயரவில்லை;எனவே,பேராசையானது இந்தியமயமாகிவிட்டது;மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நோக்கி நமது நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது;ஒரே ஒரு உதாரணம் சொல்வோமே: செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஏர்டெல்,ஏர்செல்,ரிலையன்ஸ் இவைகளுக்கிடையே ஏதோ வாய்க்கால் தகராறினால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பலவிதங்களில் அவதிப்படுகின்றனர்;ஏர்செல் சேவை வைத்திருப்பவர்களுக்கு ஏர்டெல் சேவையிலிருந்து குறுந்தகவல் செல்வதில்லை;ரிலையன்ஸ் சேவை வைத்திருப்பவர்களுக்கு ஏர்செல்லில் இருந்து குறுந்தகவல் சேவை செல்வதில்லை;இந்த சிறு பிரச்னை இன்று தேசியமயமாகி  இருக்கிறது.அமெரிக்காவைப் போல இந்தியாவையும் முதலாளித்துவநாடாக மாற்றிட முயன்றதன் விளைவே இந்த குளறுபடி;இதே போல ஒவ்வொரு இந்தியனையும் பாதிக்கும் உலகமயமாக்கலின் பின்விளைவுகளைப் பற்றி ஒரு கோடிபக்கங்கள் எழுதலாம்;எழுதி என்ன செய்ய ? கொள்கை வகுப்பாளர்கள்,திட்டங்களை வகுப்பவர்கள்,அதை நடைமுறைக்குக்கொண்டு வருபவர்கள் கிடுக்குப்பிடி போட்டு இந்த  நிறுவனங்களை அதிகாரம் என்ற சாட்டையால் விளாசுவதற்குப் பதிலாக,பையில் நிரப்பிக்கொள்கின்றன;பொதுமக்களை இம்சிக்கின்றன;எனவே,நியாயமான வழிமுறைகளில் ஒவ்வொருவருமே செல்வச் செழிப்பை அடைய ஆசைப்படுகிறோம்;அதற்காகவே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டைப் பின்பற்றவும்,நினைவூட்டவும் மாதம் தவறாமல் பதிவுகளை வெளியிட்டு வருகிறோம்;


நம் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தை வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர்.இவர்கள் நமது பிறந்த ஜாதகப்படி,நாம் செய்யும் தொழில்,வேலை,சேவையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செல்வவளத்தைத் தந்து வருகின்றனர்.இருப்பினும்,நாம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த பாவ மற்றும் கர்மவினைகளும்,நாம் இந்த பிறவியில் பிறந்துள்ள வழிவம்சத்தில் கடந்த ஐந்து தலைமுறையினர் செய்த தவறுகளின் விளைவாகவும் நாம் ஆசைப்படும் வசதியான,செல்வச் செழிப்பை அடையமுடியாமல் தவிக்கிறோம்.


பெரும்பாலான மனித உறவுகள் சிதைவதற்கும்,மனக்கசப்பு வருவதற்கும் பண ரீதியான பிரச்னைகளே காரணம்.இந்த பிரச்னைகளால் பலர் எப்படி நாம் சம்பாதித்தாலும்,வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.அதனாலேயே பலரை மனம் நோக வைத்தும்,ஏமாற்றியும் பணம் சம்பாதிக்கின்றனர்.ஆனால்,அப்படி வாழ்வதும் மாபெரும் தவறு என்று நியாயமாக சம்பாதித்து,தினசரிவாழ்க்கையை கஷ்டங்களோடு ஓட்டிக்கொண்டிருப்பவர்களும் பல கோடி பேர்கள் இருக்கின்றனர்.தர்மத்தை மதித்து,தனது வாழ்க்கையையும்,தனது குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துபவர்களுக்காகவே ஒரு சிறந்த வழிபாடு இங்கே சொல்லப்படுகிறது.


ஆம்,நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும்   ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன?
பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்;
அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா? யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:
1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்,
2.சென்னை அருகே இருக்கும் வானகரம்
3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும்  திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது. 

 4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.              
5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி(காஞ்சிபுரத்திலிருந்து ஆட்டோவில் 25 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.அடிக்கடி பேருந்து வசதி இல்லை;குண்டும் குழியுமான சாலை வசதி இருக்கிறது.ஆனால்,பழமையான ஸ்ரீசொர்ண பைரவர் ஆவார்)
6.சிதம்பரம் கோவில்
7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்
8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) 
செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்!!!)
9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை
10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்
11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)
12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி
13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி,
   ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,
   ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,
   நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6.
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில்,
ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்
வழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம்.                   (பூசாரி செல் எண்:92451 69455)
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,     பாண்டிச்சேரி.
நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்
வழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில்  இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.
17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.
18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1.                    20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்( பஸ் ரூட்: பாகாயம் டூ காட்பாடி பேருந்துகள் எண்கள்:1,2 எனில் கல்யாண மண்டபம்  பஸ் நிறுத்தம்;            1G, 2G எனில் காங்கேயநல்லூர் ஸ்டாப்=ஆர்ச் அருகே இறங்கி நடந்து வரவேண்டும்)                                    21.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,மத்ய கைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையார்,சென்னை-20(பேருந்து நிறுத்தம்:மத்திய கைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில்,வாலாஜாபேட்டை.
 23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
                                                        26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
                                                28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.


30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.குபேரர் கோவில்,வி.ஐ.டி.கேம்பஸ் அருகில் உள்ள சாலையில் இருந்து 2 கி.மீ.தூரத்தில்,வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலை,ரத்தினமங்கலம்,சென்னை புறநகர்.

33.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
34.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.


$ இந்தப் பதிவினைப் பின்பற்றி பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தமது ஒரு மாத பணப்பிரச்னைகளில் இருந்து மீண்டு கொண்டே வருகிறார்கள்.எனவே,நாமும் இந்த தேய்பிறை அஷ்டமிக்கு நமது ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்வோம்;பண நெருக்கடிகளிலிருந்தும்,கர்மவினைகளிலிருந்தும் மீளத் துவங்குவோம்!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
***தமிழ்நாட்டின் தெற்கே திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள்  கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.இதற்கு தெற்கே கன்னியாக்குமரி வரையிலும் வேறு சன்னதி இல்லை; என்பது வருத்தமான உண்மை ஆகும்.
  கார்த்திகை மாதத்து தேய்பிறை அஷ்டமி இராகு கால நேரத்தில் நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண  பைரவர் சன்னதிக்கு வந்து மனதார  நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்;இந்த ஒன்றரை மணி நேரத்தில்(அந்தக் காலத்தில் இதை முகூர்த்தம் என்பர்) நாம் வேண்டும் நியாயமான எந்த கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும்.

இந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது 16 மாத தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டதால் கிடைத்த அனுபவ உண்மைகள்  ஆகும்.
1.நமக்கு வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை  உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3.வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்;
4.சனியின் தாக்கம்(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி) தீரும்;
5.வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்;தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்;
6.அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.அரசியல் சூழ்ச்சிகள் நிர்மூலமாகும்;
7.பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8.நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.
ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்:
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ
கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்,தங்களுடைய வீட்டின் தெற்குச் சுவற்றில் எலுமிச்சை பழத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;அந்த சூலாயுதத்தின் மையப்பகுதியை பார்த்தவாறு மேற்கூறிய மூல மந்திரத்தை ஜபிக்கலாம்;
எம்மிடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கியிருப்பவர்கள் அவருடைய பாதத்தை பார்த்தவாறு இந்த ராகு கால நேரத்தில் இந்த மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

சனியின் பிடியில் இருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடகம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக இந்த தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரங்களில் மூலமந்திரத்தை   330 முறை ஜபிக்க வேண்டும்;அப்படி ஜபிக்கும் முன்பு வெள்ளைப்பூசணிக்காயினை இரண்டாக வெட்டி,அதன் உள்பாகத்தில் இருக்கும் சோற்றுப்பகுதியை நீக்கிவிட்டு,நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்.33 என்பது குபேரனுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழங்கிய செல்வ வளச்சின்னம் ஆகும்.
இந்த அற்புதமான நன்னாளில்,வீடு வாசல் இல்லாத ஒரே ஒரு அனாதை அல்லது சாதுவுக்கு அன்னதானம் செய்தால் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மகிழ்ச்சியடைவார்!!!

No comments:

Post a Comment