Monday, October 7, 2013

அஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்!!!


புல்லசுகா திகளுக்கு ளென்று மேன்மை
பொருந்தாத நரகமுடின் சுவர்க்க மாதி
இல்லசுகா திகளூடனே கீழு மேலு
மெய்திநலி வுறனீங்கி யிருக்க வேண்டி
வல்லசுகா தியரெண்ணி வையந் தன்னில்
வளங்குலவு மனோலயமாய் வைகு மாறு
நல்லசுகா தனமதனில் இருக்கும் எங்கள்
நாயகன் அடிமலரை நாடி வாழ்வாம்


இந்த பாடலின் அர்த்தம்: பொருந்திய துன்பம் முதானவைகளுடனே இழிவினை உடைய நரகத்துடன் சுவர்க்க முதலிய தானங்களில் மனைவி மக்களுடன் வாழுகின்ற இன்பம் முதலியவைகளுடன் கீழும் மேலும் சென்று துன்பம் அடைதலை யொழித்துச் சுகமாய் இருக்கக் கருதி,தவத்தில் வல்ல சுகன் முதலியவர்கள் தியானித்து உலகத்தில் வளப்பம் பொருந்திய மனோலயத்துடன் வாழும் வண்ணம்,நல்ல சுகாதனத்தில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கர்த்தா(சிவனின்)
வின் திருவடித் தாமரைகளைத் தியானித்துக் கொண்டு வாழ்வோமாக!
சீர்காழியில் இருந்து அருள் தரும் சட்டைநாதருக்கு இந்த பாடலின் கருத்துக்கள் பொருந்தும்;இந்த ஆலயத்தில் அஷ்ட பைரவர்களும்,உள்சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீகாலபைரவரும் இருந்து அருளாட்சி புரிந்து வருகின்றனர்.


சித்தர்களின் தலைவர் அகத்தியர்,திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த இடைக்காடர்,ரோம ரிஷி, மருத்துவத்தின் முன்னோடியாகத் திகழும் தன்வந்திரி,கொங்கணர்,கோரக்கர்,கருவூரார்,கமலமுனி,போகர்,   புலஸ்தியர் போன்ற சித்தர்களுக்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அஷ்டமாசித்திகள் கிடைத்த இடம் இந்த சீர்காழி ஆகும்.


திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களிலும்,தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களிலும்,திங்கட்கிழமைகளிலும் இங்கு வந்து வழிபாடு செய்தால் நமது உள்முக வாழ்க்கை ஆரம்பமாகும்.


சித்தராக விரும்புவோர் 11 திங்கட்கிழமைகளுக்கு பலாப்பழத்தால் அபிஷேகம் செய்துவந்தால்,தகுந்த குருவை அடையமுடியும்.இந்த 11 திங்கட்கிழமைகளுமே உரியவர்கள் விரதமிருந்து இந்த கோவிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீகாலபைரவரை “ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ” என்று ஜபிக்க வேண்டும்.எந்த திங்கட்கிழமையன்று இங்கே வருகிறோமோ அன்றும் அதற்கு முந்தைய நாளும்,மறு நாளும் தாம்பத்திய நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டும்.


இந்த 11 திங்கட்கிழமைகளிலும் கோவில் திறந்திருக்கும் நேரத்தில் மேற்கூறிய மந்திர ஜபத்தை கோவிலுக்குள்ளே இருக்கும் ஸ்ரீகாலபைரவ சன்னதியில் மஞ்சள் பட்டுத்துண்டின் மீது அமர்ந்து கண்களை மூடி ஜபிக்க வேண்டும்.
கோவில் நேரம் தவிர மீதி நேரங்களில் நாம் தங்கியிருக்கும் அறையில் (முதல் நாளே வந்து அந்த அறையை கோமயத்தினால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும்;சந்தனப்பத்தி பொருத்தியிருக்க வேண்டும்;சந்தன பத்தி வாசனை திங்கட்கிழமை முழுவதும் அறையில் பரவிக்கொண்டே இருக்க வேண்டும்)இதே மந்திரத்தை ஜபித்து வர வேண்டும்.
திங்கட்கிழமையன்று குறைந்தது  5 மணி நேரம் அதிகபட்சம் 12 மணி நேரம் இவ்வாறு ஸ்ரீகாலபைரவ மந்திரத்தை ஜபித்துவருவது அவசியம்.விரத நாளில் அடிக்கடி இளநீர் அல்லது பசும்பால் அல்லது தண்ணீர் இவைகளில் ஏதாவது ஒன்று மட்டும் அருந்திக்கொள்ளலாம்.


இந்த முதல்கட்டமான 11 திங்கட்கிழமைகளுக்கு வந்து மேற்கூறியவாறு வழிபாடு முடித்த சில வாரங்களில் உங்களை தகுந்த குரு தேடி வந்து அடுத்த கட்ட வழிபாட்டுக்கு  தயார் செய்வார்;அது வரையிலும் வேறு எந்த தியானப்பயிற்சிக்கும்,ஆன்மீகப்பயிற்சிக்கும் செல்லாமல் இருக்க வேண்டும்.நீங்கள் உலகில் எந்த மூலையிலிருந்து வந்து இந்த வழிபாட்டைச் செய்தாலும்,அந்த மூலைக்கு ஸ்ரீகாலபைரவரின் அருளாசி பெற்ற குரு உங்களைத் தேடி வருவார்.மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் சீர்காழிக்குச் செல்வோமா?
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment