Thursday, October 17, 2013

சதய நட்சத்திர பைரவர் சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்!!!





சங்கர் என்னும் நாகராஜன் சதாசிவன் மீது அளவற்ற பக்தியுடன் இருந்தார்;அதேபோல,பதுமன் என்ற நாகராஜன் திருமால் மீது அளவற்ற பிரேமையுடன் இருந்தார்;இருவருக்குமே சதாசிவன் பெரியவரா? திருமால் பெரியவரா? என்ற வாதம் அடிக்கடி எழுந்தது;இவர்கள் இருவருமே தீர்ப்பு வேண்டி ஆதிபராசக்தியிடம் முறையிட்டனர்;இருவருமே சமசக்தி கொண்டவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்விக்க,இருவரும் இணைந்து காட்சி தரும்படி ஆதிபராசக்தி தவமிருந்தாள்.இதையடுத்து இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சிதந்தனர்.பின்னர்,ஆதிபராசக்தியின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் சங்கரலிங்கமாக எழுந்தருளினார்.
நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர்.இந்தச் சம்பவம் நடைபெற்று சில ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன;காலப் போக்கில் இந்த சங்கரலிங்கத்தை புற்றுமூடிவிட்டது.நாகராஜாக்கள் அதனுள் இருந்தனர்;பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது,உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார்.ரத்தம் வெளிப்பட்டது.அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார்;தகவல் பாண்டிய மன்னனுக்குச் சென்றது லிங்கம் இருந்த இடத்தில் அவர் கோவில் எழுப்பினார்.
ஆதிபராசக்தி சிவ விஷ்ணுவை சங்கரநாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்த அவர்களின் காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு ஆகும்.(தபஸ் என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு தவம் என்ற அர்த்தம் உண்டு)
இவ்விழா 12 நாட்கள் திருநெல்வேலிமாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும்;ஆதிபராசக்தி இங்கே கோமதி அம்பாள் என்று அழைக்கப்படுகிறாள்.இந்த 12 நாட்களில் 11 நாட்கள் அம்பாள் மட்டும் தேரில் எழுந்தருவாள்.12 வது நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள்.மாலையில் சங்கரநாராயணன் இவளுக்கு காட்சி தருகிறாள்.அதன் பின் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோவிலுக்குள் செல்வார்.
மதுரை செங்கோட்டை ரயில் மார்க்கத்தில் ராஜபாளையத்துக்கு அடுத்த நிறுத்தமே சங்கரன்கோவில் ஆகும்.மதுரையில் இருந்து ராஜபாளையம் வந்து,திருநெல்வேலி செல்லும் சாலை மார்க்கமாகவும் சங்கரன்கோவிலுக்குச் செல்லலாம்.
சதய நட்சத்திரத்துக்குரிய சர்ப்ப பைரவரை இங்கே தரிசிக்கலாம்;எப்பேர்ப்பட்ட ஆளையும் சீர்திருத்தி நேர்மையானவராக மாற்றும் திறன் சதயத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு;இவர்களை மதிப்பிடுவதும் இவர்களின் சாமர்த்தியத்தை கணக்கிடுவதும் முடியாத காரியம்;அகத்தியர் கும்பலக்னத்தில் சதயம் 3 ஆம் பாதத்தில் பிறந்தவவர்;அலெக்ஸாண்டருக்கு முன்பே உலகை ஆட்சி புரிந்தவர் நமது ராஜராஜசோழ மன்னன் பிறந்தது சதயம் நட்சத்திரத்தில் தான்!
படத்தில் நீங்கள் பார்ப்பது சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர் ஆவார்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ!!!

No comments:

Post a Comment