Thursday, October 3, 2013

வெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்!!!அந்த பெண்மணி டீன் ஏஜ்ஜை தற்போதுதான் கடந்திருக்கிறார்;ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்;ஆண் தன்மை நிறைந்த பெண்கள் கி.பி.1990 முதல் நிறைய பிறந்துள்ளார்கள்;(அதே போல பெண் தன்மை நிறைந்த ஆண்களும் நிறைய பிறந்துவருகிறார்கள்;)எதையும் துணிச்சலாகச் செய்பவர்;பணிபுரியும் இடத்தில் இவரிடம் காதலைச் சொல்லி பல ஆண்கள் இவரிடம் வசவும்,அடியும் வாங்கியிருக்கின்றனர்;இருப்பினும்,ஒரே ஒரு ஆண் ஏழு ஆண்டுகள் துரத்தி,இந்தப் பெண்மணியின் மனதில் இடம் பிடித்துவிட்டான்;அதன் பிறகு,ஒரே ஆண்டில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு,பிரிந்துவிட்டார்கள்;இவரது காதல்ப் பேச்சுக்களை அவன் செல்லில் பதிந்து வைத்திருக்கிறான்;இந்த சூழலில் அவன்,இவளைத் திருமணம் செய்ய தனது பெற்றோர்கள்,நண்பர்கள்;இந்தப் பெண்மணியின் நண்பர்கள்,உறவினர்கள் என்று ஒரு பெரிய லாபியை உருவாக்கி,அவர்கள் மூலமாக இவளது சம்மதத்தைக் கட்டாயப்படுத்தி வாங்கியிருக்கிறான்;
இந்த சூழ்நிலையில் இந்தப் பெண்ணுக்கு பதவி உயர்வு வந்தது;அதன் மூலமாக தினமும் இணையத்தில் பணிபுரியும் சூழ்நிலை உண்டானது;நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவை வாசித்து வந்திருக்கிறார்;அவர் தொடர்ந்து மூன்று புதன் கிழமைகளுக்கு அலுவலகத்தில் அரைமணி நேரம் அனுமதி கேட்டு,ஸ்ரீகாலபைரவரை முறைப்படி வழிபட்டு வந்திருக்கிறார்;இந்தப் பெண்மணியின் முன்னாள் காதலன் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது,ஒரு திருப்பத்தில் வேகமாகத் திரும்பியிருக்கிறான்;அந்த திருப்பத்தில் சாலை சாலையாக இல்லாமல் குண்டும் குழியுமாக இருந்ததால்,அவனது செல்போன் தவறி கீழே விழுந்திருக்கிறது;அது தெரியாமல்,வீட்டிற்குச் சென்றுவிட்டான்;வெகு நேரமாக செல்போனில் இருந்து அழைப்புகள்/குறுந்தகவல் எதுவும் வராமல் போனதால் செல்போனைத் தேடியிருக்கிறான்;செல்போன் காணவில்லை;
இவன் அந்த இடத்தைக் கடந்ததும்,ஒரு பொக்லைன் வந்திருக்கிறது;அந்த பொக்லைனால் அந்த செல்போன் நசுங்கி தூள்தூளாகிவிட்டது;மறுநாள் அந்தப் பாதை வழியாக வேலைக்கு தனது பெப் ப்ளஸ்ஸில் பயணித்த இந்தப் பெண்மணி அந்த நொறுங்கிய செல்போன் இருக்கும் இடத்தைக் கடக்கும் போது திடீரென வண்டி நின்றுவிட்டது;சுமாராக பதினைந்து நிமிடங்களுக்குப்பிறகு, வண்டி ஸ்டார்ட் ஆனது;வண்டி புறப்படும்போது,அந்த நொறுங்கிய செல்போனின் பின்பகுதியில் இந்த பெண்ணின் ஒட்டப்பட்டிருந்த போட்டோப் பகுதி தெரிந்திருக்கிறது;எப்போதும் நெரிசலாக இருக்கும் அந்த சாலையில் அந்த நேரமாகப் பார்த்து போக்குவரத்து சிறிதும் இல்லை;அதை அந்தப் பெண் எடுத்து,அது தனது போட்டோ தானா? என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார்;உடனே,அந்தப் பையனின் செல்லுக்கு போன் செய்திருக்கிறார்.போன் போகவில்லை; நீங்கள் அழைத்த எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று குரல் வர,சந்தோஷமடைந்தவர்;இன்று மதியத்துக்குள்ளாகவே அந்த பையனின் செல்போன் காணாமல்போனதை விசாரித்து உறுதி செய்திருக்கிறார்.விருப்பமில்லாமல் நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தம் நின்று போனது;


ஸ்ரீகால பைரவருக்கு கோடி நன்றிகள் சொன்ன அந்தப் பெண்மணி இதை எம்மிடம் தகவலாகச் சொல்லியிருக்கிறார்.அவரது அனுமதியோடு இந்த பதிவு வெளியிடப்படுகிறது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அவர் ஒரு கல்லூரியின் பேராசிரியர்.அவரது 32 ஆம் வயதில் கேது சார மஹாதிசை ஆரம்பமாகியிருக்கிறது.அவரது பேச்சு,சிந்தனை அனைத்தும் கோவில்கள்,சித்தர்கள்,வாசியோகம்,நவகண்டயோகம் என்று அவரது தேடல் அதிகமாக அவர் நமது ஆன்மீகக்கடல் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.அவரது குலதெய்வம் எது ? என்பது அவருக்குத் தெரியவில்லை;அதை அவரது அம்மா,அப்பாவிடம் கேட்க அவர்களுக்குத் தெரியவில்லை;கடந்த ஒன்பது மாதங்களாக தனது அப்பாவழி உறவினர்கள் இருக்கும் ஊர்கள்,கிராமங்களுக்குச் சென்று விசாரித்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் இவரை இவரது உறவினர்கள் பார்த்தாலே தலைதெறிக்க ஓட ஆரம்பித்துள்ளார்கள்.இவர் பேசும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்களால் கேட்கும் மனோநிலை உருவாகவில்லை;(இவர் எதிர்காலத்தில் இவரது குலதெய்வப்பூசாரியாகவும்,ஆன்மீகப்பேச்சாளராகவும் பரிணமிக்கப் போகிறார்)நமது பதிவுகளில் ஸ்ரீகாலபைரவரின் ஆற்றலைப் பயன்படுத்துவோமா?வைப் படித்துவிட்டு,தொடர்ந்து நான்கு புதன்கிழமைகளுக்கு ஸ்ரீகாலபைரவரை கர்மசிரத்தையாக வழிபட்டிருக்கிறார்.

மூன்றாவது புதன்கிழமை வழிபட்டு முடித்துவந்த வெள்ளிக்கிழமையன்று இவரது தூரத்து உறவினர் தற்செயலாக அறிமுகமாகியிருக்கிறார்.முதல் அறிமுகத்திலேயே இவரது குலதெய்வம் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டார்;அடுத்த இரண்டாம் நாளன்றே(ஞாயிறு) தனதுகுலதெய்வத்தின் இருப்பிடம் சென்று வழிபட்டிருக்கிறார்.அவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை;நாம் ஒவ்வொருவரும் ஸ்ரீகாலபைரவரை வழிபட்டாலோ,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டாலோ நமது வழிபாட்டிற்கான பலன் முதலில் நமது குலதெய்வத்திற்குச் செல்லும்;அதனால்,நமது குலதெய்வத்தின் சக்தி அதிகரிக்கும்; நமதுகுலதெய்வத்தின் சக்தி அதிகரித்தால்,நமக்குத்தான் முதலில் வரங்களைத் தரும்;அதன்மூலமாக நாம் சகலவிதமான பிரச்னைகளில் இருந்தும் விலகிவிடுவோம்;தினமும் காலபைரவர் வழிபாடு செய்பவர்களுக்கு இந்த உண்மை பலமுறை நிரூபணமாகியிருக்கிறது;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment