சித்திரை நட்சத்திரத்தின் 1,2 ஆம் பாதங்கள் கன்னிராசியிலும்,3,4 ஆம்
பாதங்கள் துலாம் ராசியிலும் இருக்கின்றன;இப்படி இருக்கும் நட்சத்திரங்களை உடைந்த நட்சத்திரங்கள்
என்றும்,இப்படி இருக்கும் நட்சத்திர நாட்களை உடலற்ற நாட்கள் என்றும் ஜோதிடப்படி சொல்வர்;கன்னிராசியில்
பிறந்த சித்திரை நட்சத்திர ஜாதகர்களும்,துலாம் ராசியில் பிறந்த சித்திரை நட்சத்திரஜாதகர்களும்
தர்மபுரியில் கோட்டை கோவில் அருள் தரும் அன்னை தகடூர் கல்யாண காமாட்சி அம்பிகை உடனுறை
அருள்நிறை மல்லிகார்ஜீன சுவாமி திருக்கோவிலில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவரை வழிபடவேண்டும்.
அருளுக்கென ஸ்ரீ ராஜதுர்கையும்
பொருளுக்கென காலபைரவரும்
நம் பாரத தேசத்தின் பெரும் சங்கல்ப தெய்வங்களாகும்.
காலனாகிய எமனையும்,காலத்தையும் கட்டுப்படுத்தும் ஒரே தெய்வம் ஸ்ரீகாலபைரவப்பெருமான்!
வாழ்க்கை என்னும் பாதையில் பிறப்பு துவங்கி கல்வி,வேள்வி,திருமணம் முதலான 16 முக்கிய
சூழல்களையும் நவக்கிரகங்கள் மூலமாக அருளக்கூடியவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்!
காலத்தைக் கட்டுப்படுத்துவதாலும்,காலம் என்னும் நவக்கோள்களும் இவருடைய
ஆணையை சிரமேற்கொண்டு செயல்பட்டுவருகின்றனர் என்பதாலும் நமது கர்மவினைகளை மொத்தமாக அழிக்கக்
கூடியவர் ஸ்ரீகாலபைரவப் பெருமானே!
காலச்சக்கரத்திற்கு இருகண்களாக இருப்பவர்களே ரவி என்ற சூரியனும்,மதி
என்ற சந்திரனும்! சூரியனின் புத்திரர்களான எமன்,சனி இருவருக்குமே அருள் புரிந்தவர்
ஸ்ரீகால பைரவப் பெருமான்!
சனிபகவானுக்கு ஈஸ்வரப்பட்டம் வழங்கியதால் நம் அறியாமை இருள் நீங்கிட
ஸ்வாநம் என்னும் நாய் வாகனம் கிழக்கு புறமிருக்க 3க்கு 3 யந்திர வடிவில் ஆலய அமைப்பில்
குபேர பாகத்தில் திருவருள் புரியும் புண்ணியஸ்தலமே தர்மபுரி மல்லிகார்ஜீன சுவாமி திருக்கோவில்!!!
தொடர்ந்து எட்டு ஜன்ம நட்சத்திர நாட்களில் இவரை இங்கே வந்து மூலவர்,அம்பிகைக்கு
அபிஷேகம் செய்ய வேண்டும்.முடிவாக ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் நிகழும் போது பைரவ சஷ்டிக்கவசம்
பாட வேண்டும்;முடிவில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.வழிபாடு முடிந்ததும்
நேராக அவரவர் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட சித்திரை நட்சத்திரக்காரர்கள் ஒன்று சேர்ந்தும்
இந்த அபிஷேகம்,வழிபாடுகள் செய்யலாம்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
No comments:
Post a Comment