Monday, October 7, 2013

கல்வித்தடையை நீக்கிடும் திருக்கண்டியூர் வீரட்டானம்!!!



ஸ்ரீகாலபைரவரின் வீரதீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டு இடங்களே அட்டவீரட்டானங்கள் என்று அழைக்கப்படுகின்றன.அதில் முதல் வீரட்டானமே திருக்கண்டியூர் வீரட்டானம் ஆகும்.இந்த வீரட்டானம் தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் காவிரிக்கரையோரமாக அமைந்திருக்கிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பிரம்மனது ஐந்தாவது தலையை ஸ்ரீகாலபைரவர் கொய்த இடம் இது.அதற்குப் பிறகு,பிரம்மப் பதவிக்கு வந்த வேறு ஒரு பிரம்மன் இங்கே வருகைதந்து லிங்கப் பிரதிட்டை செய்து சாப நிவர்த்தி பெற்றார்.அவ்வாறு சாப நிவர்த்திக்காக தமது மனையாள் கலைவாணி என்ற சரஸ்வதியோடு வந்து பல நூற்றாண்டுகளாக வழிபட்டார்.
எனவே,பிரம்மா தனது மனையாளாகிய கலைமகளுடன் சதாசிவனாகிய ஸ்ரீகால பைரவரை வழிபட்டு சாப நிவர்த்தி பெற்றதால்,மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்.இதனால்,இங்கே முறைப்படி,பிரம்மா(அயன்+வாணி) வழிபாடு செய்ய மகிழ்வான வரங்கள் கிட்டும்; கல்வியில் ஆர்வமில்லாத குழந்தைகள்,படிப்பு நன்றாகப் படித்தாலும் தேர்வு சமயத்தில் மறந்து விடுபவர்கள்,போதிய மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவ,மாணவிகள் தங்கள் பெற்றோர்/பாதுகாவலருடன் இங்கே தொடர்ந்து ஆறு புதன் கிழமைகளுக்கு வருகை தர வேண்டும்.புதன் கிழமையில் காலை ஆறு முதல் ஏழு மணி அல்லது மதியம் ஒரு  மணி முதல் இரண்டு மணி அல்லது இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரையிலான கால கட்டத்தில் இங்கே மூலவராகிய பிரம்மசிரகண்டீசவரருக்கும்,அம்பிகைக்கும் அர்ச்சனை செய்துவிட்டு,மூலவரின் அருகில் அமைந்திருக்கும் பிரம்மா சரஸ்வதி தம்பதிக்கு பூரண அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகத்தின் முடிவில் ஐந்து லிட்டர் தேனால் அபிஷேகம் செய்து அதில் ஒரு பகுதியை பாத்திரத்தில் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்;(பட்டரிடம் தெரிவித்து சேகரித்துத் தரச் சொல்ல வேண்டும்)படிப்பு சரியாக வராத குழந்தைகள் தினமும் அந்த தேனை காலை உணவுக்கு முன்பு அருந்தி வர கல்வித்தடை,மறதி நீங்கிவிடும்.
ஒவ்வொரு புதன் கிழமையும் இவ்வாறு வழிபாடு செய்துமுடித்தப்பின்னர்,அங்கே இருக்கும் ஸ்ரீகால பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவிக்க வேண்டும்;தமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;இந்த பூஜையைச் செய்து தரும் பட்டருக்கு/பூசாரிக்கு கண்டிப்பாக ரூ.41/-தட்சிணை தர வேண்டும்.பிறகு,வேறு எந்தக்கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் போகாமலும் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இதன் மூலமாக,நிச்சயமாக கல்வியில் மகத்தான வளர்ச்சியை அடைவார்கள்.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட்ட குழந்தைகள்/மாணவர்/மாணவிகளுக்கே இந்த வழிபாடு பலன் தரும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment