Friday, October 18, 2013

உத்திராட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கரூர் வடுக பைரவர்!!!





குரங்கு முகமும்,மனித உருவும் கொண்ட முசுகுந்தச் சக்கரவர்த்தி கருர் கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கு திருப்பணிகள் செய்தார்.மூவேந்தர்களின் சேரமன்னர்களின் முடுசூடும் இடமாக இந்த ஆலயம் இருந்திருக்கிறது.புகழ்ச்சோழன் பெயரால் நூற்றுக்கால் மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.கொங்கு மண்டலத்தில் அமைந்திருக்கும் ஏழு புராதனமும் பெருமையும் நிறைந்த ஆலயங்களில் இதுவே முதன்மைத் தலம் ஆகும்.தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலாகிய இங்கே சுயம்பு மூர்த்தியாக கல்யாணபசுபதி ஈஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.விண்ணவரையும்,மண்ணவரையும் ஒன்றாகப் பாவிக்கும் வகையில் சவுந்தரநாயகி ஒரு அம்பாளாகவும்,வேட்டுவக் குலத்தில் பிறந்து பசுபதியை நோக்கி பெரும் தவம் செய்து மணம் புரிந்த அலங்காரவள்ளி மற்றொரு அம்பாளாகவும் அமைந்திருக்கின்றனர்.
கருவூர் சித்தர் இங்கே சூட்சுமமாக இருந்து கரூர் மாவட்ட மக்களையும்,தேடி வரும் அனைத்து ஆத்மாக்களையும் வழிநடத்தி வருகிறார்.

இப்பேர்ப்பட்ட சிறப்பு வந்த இந்த ஆலயத்தில் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய வடுக பைரவர் அருள்பாலித்துவருகிறார்.
தொடர்ந்து 6 உத்திராட நட்சத்திரம் வரும் நாட்களில் மூலவர்,அம்பிகைகள்,சித்தர் கருவூராருக்கு அபிஷேகம்  செய்துவிட்டு,ராகு காலத்தில் வடுக பைரவரைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.இதன் மூலமாக வடுக பைரவரின் அருளாசி உத்திராட நட்சத்திரக்காரர்களுக்குக் கிட்டும்.

தொலைதூரத்தில் வசிக்கும் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்த ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள்  தனது பூஜை அறையில் வைத்து தினமும் 108 முறை ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுதி வரலாம்; அல்லது ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி வாசித்து வரலாம்;நிறைய ஓய்வு நேரம் உள்ளவர்கள் ஸ்ரீகாலபைரவர் 1008 போற்றியை வாசித்து வரலாம்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment