Monday, December 16, 2013

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தர்மபுரி பைரவர்!!!



சித்திரை நட்சத்திரத்தின் 1,2 ஆம் பாதங்கள் கன்னிராசியிலும்,3,4 ஆம் பாதங்கள் துலாம் ராசியிலும் இருக்கின்றன;இப்படி இருக்கும் நட்சத்திரங்களை உடைந்த நட்சத்திரங்கள் என்றும்,இப்படி இருக்கும் நட்சத்திர நாட்களை உடலற்ற நாட்கள் என்றும் ஜோதிடப்படி சொல்வர்;கன்னிராசியில் பிறந்த சித்திரை நட்சத்திர ஜாதகர்களும்,துலாம் ராசியில் பிறந்த சித்திரை நட்சத்திரஜாதகர்களும் தர்மபுரியில் கோட்டை கோவில் அருள் தரும் அன்னை தகடூர் கல்யாண காமாட்சி அம்பிகை உடனுறை அருள்நிறை மல்லிகார்ஜீன சுவாமி திருக்கோவிலில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவரை வழிபடவேண்டும்.

அருளுக்கென ஸ்ரீ ராஜதுர்கையும்
பொருளுக்கென காலபைரவரும்
நம் பாரத தேசத்தின் பெரும் சங்கல்ப தெய்வங்களாகும்.

காலனாகிய எமனையும்,காலத்தையும் கட்டுப்படுத்தும் ஒரே தெய்வம் ஸ்ரீகாலபைரவப்பெருமான்! வாழ்க்கை என்னும் பாதையில் பிறப்பு துவங்கி கல்வி,வேள்வி,திருமணம் முதலான 16 முக்கிய சூழல்களையும் நவக்கிரகங்கள் மூலமாக அருளக்கூடியவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்!

காலத்தைக் கட்டுப்படுத்துவதாலும்,காலம் என்னும் நவக்கோள்களும் இவருடைய ஆணையை சிரமேற்கொண்டு செயல்பட்டுவருகின்றனர் என்பதாலும் நமது கர்மவினைகளை மொத்தமாக அழிக்கக் கூடியவர் ஸ்ரீகாலபைரவப் பெருமானே!

காலச்சக்கரத்திற்கு இருகண்களாக இருப்பவர்களே ரவி என்ற சூரியனும்,மதி என்ற சந்திரனும்! சூரியனின் புத்திரர்களான எமன்,சனி இருவருக்குமே அருள் புரிந்தவர் ஸ்ரீகால பைரவப் பெருமான்!

சனிபகவானுக்கு ஈஸ்வரப்பட்டம் வழங்கியதால் நம் அறியாமை இருள் நீங்கிட ஸ்வாநம் என்னும் நாய் வாகனம் கிழக்கு புறமிருக்க 3க்கு 3 யந்திர வடிவில் ஆலய அமைப்பில் குபேர பாகத்தில் திருவருள் புரியும் புண்ணியஸ்தலமே தர்மபுரி மல்லிகார்ஜீன சுவாமி திருக்கோவில்!!!

தொடர்ந்து எட்டு ஜன்ம நட்சத்திர நாட்களில் இவரை இங்கே வந்து மூலவர்,அம்பிகைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.முடிவாக ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம்  செய்ய வேண்டும். அபிஷேகம் நிகழும் போது பைரவ சஷ்டிக்கவசம் பாட வேண்டும்;முடிவில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.வழிபாடு முடிந்ததும் நேராக அவரவர் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட சித்திரை நட்சத்திரக்காரர்கள் ஒன்று சேர்ந்தும் இந்த அபிஷேகம்,வழிபாடுகள் செய்யலாம்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


அவிட்ட நட்சத்தினர் வழிபட வேண்டிய சீர்காழி அஷ்டபைரவர்!!!



சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோவிலின் தெற்கு நுழைவுவாசலின் உள்புறத்தில் மேற்குத்திசையில் அஷ்ட பைரவ சன்னதி அமைந்திருக்கிறது.

அஷ்டபைரவ திருமேனிகள்(சிலைகள்) ஒரு விசாலமான அறையின் நான்கு சுவர்களில் இருக்கும் மாடல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.இந்த அறை சட்டைநாதரின் பள்ளியறையாக நம்பப்படுகிறது.இந்த சன்னதியின் மேல் கட்டப்பட்ட சிறிய கோபுரத்தில் அஷ்ட பைரவர்கள் எட்டு திசையை நோக்கிய நிலையில் இருப்பதாக சுதை வேலைப்பாட்டு உருவங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.இந்த அறையில் ஒரு ஊஞ்சல் உண்டு.அதன் மேல் சட்டைநாதரின் படம் வைக்கப்பட்டுள்ளது.ஊஞ்சலுக்கு அடியில் முள் ஆணிகள் கொண்ட பாதக்குறடுகளும் காணப்படுகின்றன;இந்த சன்னதியில் சுக்கிரலிங்கம்,சுக்கிர விநாயகர் கருங்கல் விக்கிரகங்களாக கிழக்கு நோக்கி,மேல்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த சன்னதியில் அஷ்டபைரவ அபிஷேகமும் வழிபாடும் நடைபெற்றுவருகின்றன;ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் அஷ்டபைரவ பூஜையில் வடை,பாசிப்பருப்பு பாயாசம்,சுக்கு கலந்த வெல்லச் சர்க்கரை முதலியவை படைக்கப்படுகின்றன.பூஜையின் முடிவில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன;பூஜையின் போது இந்த அஷ்டபைரவர் அறை முழுவதும் சாம்பிராணி புகை காட்டப்படுகிறது.அதன் பிறகு ஆண்கள் சட்டையில்லாமலும்,பெண்கள் தலையில் பூ சூடாமலும் இந்த அறையினுள் சென்று வழிபட அனுமதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10 மணிக்கு சட்டைநாதரின் அம்சமாக விளங்கும் பத்ரலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறுகிறது.பிறகு,சட்டைநாதர் சன்னதியில் புனுகு சாத்தப்படுவதோடு வழிபாடு நிறைவடைகிறது.

அவிட்டநட்சத்திரத்தில் பிறந்தவர்கள்(அவிட்டம் 1,2 ஆம் பாதம் எனில் மகர ராசி,அவிட்டம் 3,4 ஆம் பாதம் எனில் கும்பராசி) இந்த ஆலயம் தவிர,சேலம் ஆத்தூரில் இருந்து 20 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கும் ஆறாகழூரில் அமைந்திருக்கும் ஸ்ரீகாமநாதீஸ்வரர் ஆலயத்தில் விளங்கும் அஷ்டபுஜ பைரவரையும் வழிபடலாம்.ஆறாகழூர் சின்னசேலத்திலிருந்து 4 கீ.மீ.தொலைவில் அமைந்திருக்கிறது.

அவிட்டத்தில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்தில் தனது ஜன்ம நட்சத்திரம் வரும் நாட்களில் வழிபட இப்பிறவியிலேயே முக்தியைப்பெறுவர்;நிறைய பூர்வபுண்ணியம் செய்தவர்கள் இப்பிறவியுடன் சிவகணமாகவோ,பைரவ கணமாகவோ மாறுவர்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சீர்காழி சட்டநாத ஆகாச பைரவர்!!!


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சதாசிவம்,மூன்று முக்கியமான இடங்களில் நிரந்தரமாக வாசம் செய்து வருகிறார்.அதனால்,அவரை மூன்று நிலைகளிலும் வைத்து வழிபட வேண்டும்.

1.ஸ்தல விருட்சத்தின் அடியில்

2.அடியார்களின் மனதில்

3.வேதங்களின் முடியில்

இந்த அடிப்படையில் வழிபாடு பல யுகங்களாக நடத்தப்படும் இடம் நாகப்பட்டிணம் தாலுகா சீர்காழியில் உள்ள அருள்நிறை ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில் ஆகும்.இந்த ஸ்தலத்தில் மூன்று வகைத் திருமேனி வடிவங்களில் காட்சியளித்து வருகிறார்.

1.ஸ்தலவிருட்சத்தின் அடியில் பிரம்மாவால் உருவாக்கப்பட்ட ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்

2.யுகமுடிவில் பிரளயம் ஏற்படும்.அப்போது பிரணவத்தைத் தோணி வடிவமாக்கி இறைவன்,இறைவியோடு வந்து தங்கும் இடமான தோணியப்பர் சன்னதி இங்கு காட்சியளித்துவருகிறார்.

3.ஹிரண்யாசுரனை மடியில் கிடத்தி அவனை சம்ஹாரம் செய்தார் திருமாலின் அவதாரமான நரசிம்மம்.சம்ஹாரம் செய்தப் பின்னரும் கூட ஆக்ரோஷம் அடங்காமல் திரிந்த நரசிம்மரை சரபேஸ்வரர் வடிவம் எடுத்து ஆட்கொண்டவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்.அவ்வாறு ஆட்கொண்டு நரசிம்மத்தின் தோலை இடுப்புக்கு ஆடையாக அணிந்து கொண்டும்,வாமன அவதாரம் எடுத்து மூன்று அடி அளந்த வாமனின் உயிரைக் கவர்ந்து,வாமனின் உடலைச் சட்டையாக அணிந்தும் எலும்பை கதாயுதமாகக் கைகொண்டும் காட்சியளிக்கும் ஸ்ரீசட்டைநாதர் சின்முத்திரையோடு காட்சியளிக்கிறார்.

திரிபுர சம்ஹாரத்தின் போது ஆதிசிவன்,திருவதிகையில் சிரித்தபோது அந்தச் சிரிப்பில் தோன்றிய அக்னிக் குஞ்சு சாந்தமடைந்து ஒரு சிறுகுழந்தையாக வடிவமெடுத்தது.வடிவமெடுத்து சதாசிவனின் நெஞ்சில் தங்கியது;அந்தக் குழந்தையை சதாசக்தி வளர்த்து வந்தாள்.சதாசிவனின் ஆணைப்படி,அந்த அக்னிக்குஞ்சு விஸ்வரூபம் எடுத்தது;அந்த உருவம் தான் சீர்காழியில் இருக்கும் ஆகாச பைரவர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார்.

சீர்காழியில் உள்ள பெரிய கோவில் கட்டுமலையின் மேல்தளத்தில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சின்முத்திரை வலது கரம் காட்ட,இடது கரம் கதாயுதத்தைத் தரையில் ஊன்றிய வண்ணம் திகம்பரராக(திசைகளையே ஆடையாக அணிந்தவர்=திகம்பரர்) சட்டைநாதர் காட்சி அளித்து வருகிறார்.இவருக்கு அபிஷேகம் கிடையாது.புனுகுச் சட்டம் மட்டும் சாத்தப்படுகிறது.இவருக்குப் படைக்கப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை;அதை வீட்டிற்கு எடுத்துவந்து சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது;அப்படியே சாப்பிட வேண்டும்;இவருடைய அம்சமாக விளங்கும் அருவுரூவஸ்வரூபம்=பத்ரலிங்கம் கீழ்த்தளத்தில் அவரை நோக்கியே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.அந்த பத்ரலிங்கத்துக்குத் தான் எல்லாவிதமான அபிஷேகங்களும் செய்யப்படுகின்றன.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சட்டைநாதருக்கு நடைபெறும் சுக்கிரவார அர்த்தஜாம பூஜை மிகவும் சக்தி வாய்ந்தது;சிறப்பு மிக்கது:அளவற்ற புண்ணியம் தரக்கூடியது;பலநூறு முற்பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே இதில் கலந்து கொள்ளக் கூடிய பாக்கியம் கிட்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட மூலம் நட்சத்திரக்காரர்கள் இந்த பைரவப் பெருமானை மூல நட்சத்திரம் வரும் நாட்களில் வழிபட்டு வர அவர்களின் ஆத்மாவின் கர்மவினைகள் அனைத்து கரைந்து காணாமல் போய்விடும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


Saturday, December 14, 2013

ஸ்ரீ செளபாக்ய பைரவர்!

Ads not by this site



 உயிர்கள் எல்லாவற்றிற்கும் சகல செல்வங்களைத் தந்து அவற்றின் மூலம் இன்பத்தையும் அனுபவிக்கச் செய்யும் தெய்வமாகத் திகழ்பவர் சௌபாக்ய பைரவர். இவர் கொலு வீற்றிருக்குமிடம் கற்பகச் சோலைகளுக்கு இடையே அமைந்துள்ள பொங்கு பூம்புனல் ஊற்றுக்கு நடுவில் உள்ளதான மகராலயமாகும்.
    மகரங்களால் தாங்கப்படும் பொன் மயமான கோட்டையில் சகல பரிவாரங்களுடன் பைரவர் எழுந்தருளியிருக்கிறார். தூய வெண்ணிறமான குதிரையை வாகனமாகவும், இரட்டை மீன் பொறித்த கொடிகளை உடையவராகவும், மச்சமுத்திரை தாங்கியவராகவும் அவர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
   பொன் வண்ணத்துடன், பளபளப்பாக அழகிய அகன்ற கண்களைக் கொண்ட மீன், கடலின் உள்ளே மறைந்திருக்கும் பெருஞ் செல்வத்தின் அடையாளமாகும்.
    கடலின் அடியாழத்தில் மகரம் எனப்படும் ஆற்றல் பொருந்திய மீன்கள் வாழ்கின்றன. செல்வத்திற்கு அவை காவல் தெய்வங்களாக உள்ளன.
        மகரங்களால் காக்கப்படும் கோட்டையே மகராலயமாகும். அத்தகைய செல்வச் சிறப்பு மிக்க மீன் வடிவக் கோட்டையில் சௌபாக்ய பைரவர் பாக்யேஸ்வரியான ஆனந்தவல்லியுடன் வீற்றிருக்கின்றார். மீன் அல்லது மீன் கொடியை உடையவராக, நகுலம் எனும் கீரியை ஏந்தியவராக, சூலம், அமிர்தம் நிரம்பிய பானபாத்திரம் தாங்கியுள்ளவராக வெண்ணிற குதிரையில் அமர்ந்து காட்சியளிக்கின்றார். பாக்யத்தின் பயன் ஆனந்தமே என்பதால் அவரது தேவியின் பெயர் ஆனந்தவல்லி என்று வழங்கப்படுகிறது. அவருடைய மகராலயமான அறுகோணக் கோட்டையின் ஆறு பக்கங்களிலும் அமைந்துள்ள உப்பரிகைகளில் உல்லாசினி, நிராகுலி, யோகின்யை, சல்லாபினி, ஹிதேஸ்வரி, விநோதினி எனும் ஆறு தேவியர் உள்ளனர். இவர்கள் அன்பர்களுக்குக் கவலையற்ற நிலையையும், மன மகிழ்ச்சியையும், இதமான மனோ நிலையையும், புதிய புதிய சுகங்களையும் பெறும்படியான பாக்யத்தைக் கொடுக்கின்றனர். இவர்களை பைரவ தந்திரத்தினர் ஷட்குல தேவியர் என்று அழைக்கின்றனர்.
    இவர்களையடுத்த எண்கோணக் கோட்டையில் அஷ்ட பைரவர்கள் அஷ்டமாத்ரு கைகளுடன் எட்டு கோணங்களில் வீற்றிருக்கின்றனர். அவர்களை அடுத்த வெளிவட்டத்தில் உள்ள தாமரைப் பொய்கைகளின் நடுவே பதினாறு பவள மாளிகைகள் உள்ளன. அதில் பதினாறு பேற்றையும் வழங்க வல்ல, சோடச லட்சுமிகள் எனப்படும் செல்வ லட்சுமிகள் வசிக்கின்றனர். இவர்களை அடுத்துள்ள கொடிகள் நிரம்பிய வல்லீ வனத்தில் உள்ள அறுபத்து நான்கு மாளிகைகளில் அறுபத்து நான்கு யோகினியருடன் அறுபத்து நான்கு பைரவர்களும், அவர்களது பரிவாரமான வேதாளர்களும் வீற்றிருக்கின்றனர்.
    அவர்களை அடுத்து மூவட்டம் விளங்குகிறது. இந்த வட்டங்களில் காடுகள் முதல் வட்டத்திலும், அடுத்த வட்டத்தில் அகழியும், மூன்றாவது வட்டத்தில் மலைகளும் உள்ளன. காடுகளில் வன பாலகர்களும், அகழியில் தீர்த்த பாலகர்களும், மலைகளில் úக்ஷத்திர பாலகர்கள் எனும் கிரி பாலகர்களும் வீற்றிருக்கின்றனர். இவர்கள் எண்ணற்றவர்கள்.
  சௌபாக்ய பைரவரையும், அவரது பரிவாரங்களையும் குறிக்கும் வகையில் அமைந்ததே சௌபாக்ய பைரவ யந்திரம்.
    இதில் கற்பக வனங்கள் சூழ்ந்த சோலைகளின் நடுவே அமைந்துள்ள பொங்கும் பூம்புனல் மடுவைக் குறிக்கும் வகையில் மடுவில் வட்டமான வடிவமும், அதன் நடுவில் பைரவர் வீற்றிருக்கும் மகராலயத்தினைக் குறிக்கும் வகையில் இரட்டை மீன் வடிவமும் உள்ளன. அதைச் சுற்றி அமைந்த அறுகோணத்தில் பைரவ சமயத்தின் குல தேவதைகளான ஷட்குல தேவியர்கள் வீற்றிருக்கின்றனர். அதை அடுத்த எண் கோலத்தில் அஷ்ட பைரவர்கள் தேவியருடன் வீற்றிருக்க, அதைச் சுற்றியமைந்த பதினாறு இதழ் தாமரையில் சோடச லட்சுமிகள் வீற்றிருக்கின்றனர். அதைச் சுற்றியமைந்த அறுபத்து நான்கு இதழ் தாமரையில் யோகினிகளும், பைரவர்களும், வேதாளங்களும் உள்ளனர். அதைச் சூழ்ந்துள்ள மூவட்டங்கள் காட்டரண், மலையரண், நீரரண் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அவற்றில் வனபாலர்கள், தீர்த்த பாலர்கள், கிரிபாலர்கள் பூசிக்கப்படுகின்றனர். அதையடுத்த மூன்று புறங்களில் பிரபஞ்சத்தைச் சுற்றியுள்ள வட்டவெளியாக உள்ள சப்தசாகரம், சக்ரவாள கிரி ஆகியவற்றிலுள்ள தேவர்கள் வழிபடப்படுகின்றனர். இந்த வட்டங்களின் நான்கு திக்கிலும் மந்திர பைரவர், யந்திர பைரவர், மணி பைரவர், ஒüஷதபைரவர் என்ற நால்வர் வீற்றிருக்கின்றனர். நான்கு புறமும் மும்மூன்று வீதிகள் உள்ளன. இவை கடல், ஆகாசம், மலை என்பனவற்றைக் குறிக்கின்றன. இந்த சகல சௌபாக்ய சக்கரத்தை நிலைப்படுத்தி அதிலுள்ள தேவர்களையும், தேவதைகளையும் ஆராதித்து வழிபடுபவன் சகல செல்வங்களையும் அடைகிறான். இவர்கள் தம்மை ஆளும் தலைவனாக விளங்கும் சௌபாக்ய பைரவரின் பக்தர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் காப்பவர்கள்.
   சௌபாக்ய பைரவர் அன்பர்களுக்கு எல்லையற்ற சுகமான வாழ்வைத் தருவதுடன் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியில் நிலைத்திருக்கச் செய்கிறார். இதிலுள்ள தேவதைகள் யாவரும் வாழ்வில் மகிழ்ச்சியை நிலைத்திருக்கச் செய்பவர்கள். பகைவர்களிடமிருந்து காப்பவர்கள். மனதில் உண்டாகும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் நீக்குபவர்கள். நாளும் புதிது புதிதான மகிழ்ச்சியை உண்டாக்குபவர்கள். இயற்கையாலும் விலங்குகளாலும் உண்டாகும் தொல்லைகளை அறவே அகற்றுபவர்கள்.

ஹஸ்த நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய அஷ்டமாசித்திகள் பெற்ற திருப்புத்தூர் யோக பைரவர்!!!


கொலை,கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒரு மனிதனை மகரிஷியாக்கியவர் இந்த யோக பைரவர் ஆவார்.அந்த மகரிஷியின் பெயர் வால்மீகி!!! 

கொன்றைமரங்கள் சூழ ஆதி காலத்தில் இந்த ஆலயம் இருந்ததால் இதற்கு கொன்றைவனம் என்றும்,வால்மீகி ஞானம் பெற்றதால் வால்மீகிபுரம் என்றும் பெயர் பெற்று விளங்கியது.தற்காலத்தில் இதன்பெயர் திருப்புத்தூர் ஆகும்.சிவகெங்கை மாவட்டத்தில் மதுரை டூ காரைக்குடி சாலை மார்க்கத்தில் அமைந்திருக்கிறது.சிவகாமசுந்தரி உடனுறை திருத்தளிநாதர் யோகபைரவர் ஆலயம் 10,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான ஆலயம் ஆகும்.
மதுரையில் இருந்து காரைக்குடி செல்பவர்கள் பேருந்துப் பயணத்தின் போதே இந்த யோக பைரவரை தரிசிக்கலாம்;

இங்குள்ள பைரவர் யோக பைரவர் பாதம் இரண்டையும் பிணைத்து பெருவிரல்களால் பூமியில் ஊன்றிய கோலத்தில் இரு கால் குதிகளையும் சகனத்தில் வைத்துள்ளார்.ஜடாமகுடமும்,நுதல்விழியில் அக்னியை ஒடுங்கி காதுகளில் சுருள்தோடும் உத்பலமும் கொண்டவராக காட்சியளித்துவருகிறார்.வக்கிர தந்தங்களும்,புன்னகையும் ஒளிர்கின்ற முகத்துடன் திகழும் இவரது வலது கையில் இடியைத் தாங்கியவாறு இருக்கிறார்;இடது கரத்தை வாமத் தொடையில் வைத்துள்லார்;கழுமுனை வழியாக அனலை எழுப்பி யோக நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்தக்கோலம் உடைய யோகபைரவரை உலகத்திலேயே இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.யோகபைரவருக்கு வாகனம் கிடையாது.

யோகபைரவருக்கு எதிராக மூன்றாம் பிரகாரத்தில் மகாமேரு பீடம் உள்ளது.இந்த மகாமேரு பீடமானது பைரவ எந்திரத்தைத் தாங்கியவாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்தலவரலாறு:

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு,நாம் வாழ்ந்து வரும் இந்த கர்ம உலகத்தில் அசுரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.அவர்கள் தமது மாயை சக்தியால் இருளை உருவாக்கினர்;பிரகராணர் என்ற முனிவர் அசுரர்களை வென்று உலகினைக் காக்க முடிவெடுத்தார்;தேவர்களையும்,முனிவர்களையும் அழைத்துக் கொண்டு காசி மாநகரத்திற்குச் சென்றார்.அங்கே கங்கைக் கரையில் உருத்திரரை குறித்து ஒரு மஹாவேள்வியை நடத்தினார்.
அவர்களுடைய வேள்விக்கு மனமிரங்கிய சதாசிவன்,தனது சக்தியில் ஒரு பகுதியை அந்த வேள்வியில் இட்டார்.அந்த வேள்வித்தீயில் இருந்து பைரவ மூர்த்தி கார்த்திகை மாதத்து தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் கூடிய அபூர்வ தினத்தில் உருவானார்.அழகிய குழந்தை வடிவில் நின்ற அந்த பைரவ மூர்த்தியைக் கண்டு அதிசயித்து,அவரை வணங்கி,தம்மை அசுரர்களிடமிருந்து காத்தருளும்படி வேண்டினர்.
அவ்வாறு வேண்டிய மறுநொடியே அசுரர்களின் மாயை விலக்கி சூரிய,சந்திரர்களை முன்பு போலவே பிரகாசிக்கச் செய்தார்;அதை அறிந்த அசுரர்கள் பைரவப் பெருமான் மீது போர் தொடுத்தனர்;பைரவர் எட்டு பைரவர்களாகப் பிரிந்து இந்தப் போரை எதிர்கொண்டனர்;பூதங்களையும்,வேதாளங்களையும் தோற்றுவித்து அசுரர்கள் மீது ஏவினார்;அவர்கள் அசுரர்களை வென்றனர்;முனிவர்களும் தேவர்களும் பைரவரை போற்றினர்.
பைரவர் அசுரர்களை அழித்த பாவம் நீங்கிட,பல தலங்களுக்குப் பயணித்தார்;ஒவ்வொரு தலத்திலும் சிவவழிபாடு செய்தார்;இறுதியில் கொன்றைவனம் என்ற இன்றைய திருப்புத்தூர் வந்து யோகத்தில் வீற்றிருந்தார்;அவருடைய யோக வழிபாட்டினால் அகம் மகிழ்ந்த சிவகாமசுந்தரி உடனுறை திருத்தளிநாதர் பைரவப் பெருமானுக்கு ஏராளமான வரங்களைத் தந்து அருள் செய்தார்.இங்கேயே வீற்றிருந்து அருள்பாலித்து சிறப்புப் பூசனைகளைப் பெற அருளினார்.

சம்பக சஷ்டி தோன்றிய வரலாறு:

ஹிரண்யாட்சகன் என்ற அரக்கன் தீவிரமான சிவபக்தனாக இருந்தான்;இவன் குழந்தை வரம் வேண்டி தவம் புரிகிறான்.தாருகாவன அழிவிற்குப் பிறகு,ஈஸ்வரன் யோக நிஷ்டையில் இருக்கிறார்.ஈஸ்வரன் ஹிரண்யாட்சகனின் தவ ஆற்றலால் மனம் இரங்கி கண்கள் திறக்கிறார்.அவனைப்பார்க்கிறார்;ஹிரண்யாட்சகனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன;அதில் ஒன்று கண்பார்வையின்றி வளர்கிறது.அதன் பெயர் அந்தகாசுரன்;இரண்டாவது குழந்தையின் பெயர் சம்பகாகரன்.இருவருமே அதிபராக்கிரமசாலிகளாக அப்பா ஹிரண்யாட்சகனின் தவ ஆற்றலின் விளைவாலும்,சிவனருளாலும் வளர்கிறார்கள்.இவர்கள் வானுலகத் தேவர்களோடு சண்டையிட்டு பல கொடிய இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்;இருவரின் செயல்களால் உலகில் தர்மத்துக்குச்  சோதனை வந்து,தீயச் செயல்கள் பெருகுகின்றன;
அசுரசகோதரர்களின் மாயச் செயல்களால் பூமாதேவியின் எடை அதிகரிக்கிறது.பூபாரத்தைக் குறைக்கவும்,தர்மத்தை நிலைநாட்டவும் தேவர்கள் சதாசிவனை வேண்டி வழிபாடு செய்தனர்;தாருகாபுரம் எரித்தப்பின்னர்,அவரது கோபம் அக்னி சாந்தமாகி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது.அதை சக்கிதேவி தனது மகனாக எடுத்து வளர்த்து வந்தாள்;தேவர்களின் துயர் நீக்கவும்,பூமியில் தர்மத்தை நிலைநாட்டிடவும் அக்னிக்குஞ்சுக்கு ஈசன் ஆணையிட அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவரே பைரவப்பெருமான்!


முதலில் ஒரு பைரவர் எட்டு பைரவர்களாக உருமாறினார்;பிறகு அந்த எட்டு பைரவர்களும் 64 மூர்த்தங்களாக(சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் செய்தது போல) உருமாறி,64 சக்தி கணங்களுடன் செயல்பட்டு அந்தகாசுரனையும்,சம்பகாசுரனையும் குமார சஷ்டியன்று வதம் செய்கிறார்.பிறகு,இருவரையும் தனது பூதகணங்களில் சேர்த்துக் கொள்கிறார்.

அந்தகாசுரனும்,சம்பகாசுரனும் தீவிரசிவபக்தர்களாக இருந்தமையால்,சிவபக்தர்களை வதம் செய்த தோஷம் நீங்கிட தனது வலது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு பல லட்சம் வருடங்களாக பூஜை செய்து வருகிறார்.இடது கரத்தை தொடையில் வைத்தவாறு காட்சியளிக்கிறார்.

குமார வடிவம் கொண்டு அசுரர்களை வதம் செய்த நாளை குமார சஷ்டி என்றும்,சம்பக சஷ்டி என்றும் பல லட்சம் வருடங்களாக திருப்புத்தூரில் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு தமிழ் வருடமும் வரும் கார்த்திகை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதி வரும் நாளில் காப்பு கட்டும் விழாவுடன் சம்பகசஷ்டி துவங்கி,ஆறுநாட்கள் விரதம் இருந்து தினம் தோறும் அஷ்டபைரவர் ஹோமம் நடைபெறுகிறது.தினமும் அபிஷேகமும்,ஆராதனைகளும் அதிவிமரிசையாக நடைபெறுகின்றன;கொடிய துன்பங்கள் தீர்த்து நெடிய இன்பம் தந்த இந்த குமார சஷ்டி நாளில் விரதம் இருப்பவர்கள் பெறுவர்.குமார சஷ்டி நாளில் விரதம் இருந்து வழிபட எல்லா நன்மைகளையும் அள்ளித் தருவார் யோக பைரவர்!!!

ஜெயந்தன் விழா:

தேவேந்திரனின் புதல்வர்களில் ஒருவன் ஜெயந்தன்.இவன் ஒருமுறை பூவுலகிற்கு வந்தபோது ஒரு பெண்ணின் இசையால் கவரப்பட்டு அவளின் இருப்பிடம் வந்தடைந்தான்.அவளது அழகில் மயங்கி, அவளை அவளது சம்மதமின்றி தழுவ முயன்றான்.
அவளோ, ‘ஏ! இந்திர குமாரனே!! நான் ஒரு முனிவரின் மனைவி.உடனே இந்த இடத்தைவிட்டுப் போய்விடு” என்று கத்தினாள்.
மோகத்தால் கட்டுண்ட ஜெயந்தனோ, “அழகியே! அழகின் அழகே!! முனிவனால் உனக்கு என்ன பயன்? உனது அழகு வீணாகும்;நாம் கலந்திருப்போம்;வா!!” என்று பிதற்றியவாறு அவளை மீண்டும் கட்டியணைக்க முயன்றான்.அவளோ அவ்விடம் விட்டு ஓடினாள்.
இந்த சம்பவம் நிகழ்ந்த போது,அந்த பெண்ணின் கணவனாகிய முனிவர் அவ்விடத்துக்கு வந்தார்;ஜெயந்தனின் அட்டூழியத்தைக் கண்டு அவர் கோபசொரூபமானார்;அவனை பூதமாகும் படி சாபம் இட்டார்.
உடனே ஜெயந்தன் பூதமாகிவிட்டான்;இருந்தும் அவர் கோபம் தணியவில்லை;எனவே,ஒரு மலையை அந்த பூதத்தின்  தலைமீது வைத்து அதனைச் சுமந்து திரியும் படி செய்தார்.
அதனால் மோகம் நீங்கிய ஜெயந்தன் பூதவடிவில், “முனிவரே! எனது தவற்றை இப்போது உணர்ந்துவிட்டேன்;என்னை மன்னித்தருளுங்கள்” என்று அவரிடம் வேண்டினான்.

அவரது கோபம் தணிந்து,அவனது கெஞ்சலால் அவர் மனதில் இரக்கம் உண்டானது. ‘ஜெயந்தா! இந்த துன்பத்தை கொஞ்ச நாட்களாவது நீ அனுபவித்தே ஆகவேண்டும்;நீ தானாகவே யோகபைரவப் பெருமான் வீற்றிருக்கும் கொன்றைவனத்திற்கு(இன்றைய திருப்புத்தூர்)ச் செல்வாய்;அப்போது அவரது அருளால் இந்த சாபம் நீங்கி,நீ பழைய நிலையை அடைவாய்;இனியாவது பிறன் மனை நோக்க நினைக்காதே” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படி ஜெயந்தன் பூதவடிவில் தலையில் மலையை சுமந்தவாறு பல தலங்களுக்குப் பயணித்தான்.இறுதியில் கொன்றைவனத்திற்கு வருகைதந்தான்.அவன் மனதில் இனம் புரியாத நிம்மதி உணர்வு பரவியது.தன்னையறியாமல் யோகபைரவரின் முன்பாகச் சென்றான்.பூதத்தின் தலையில் இருந்த மலை வெகுதொலைவில் போய்விழுந்தது;பூதத்தின்(ஜெயந்தனின் கையில் இருந்த இடி ஆயுதம் ஜெயந்தனின் கையில் இருந்து விடுபட்டு,யோக பைரவரின் கையில் பழ வடிவில் சென்று அமர்ந்தது;பூத வடிவம் நீங்கிட,மன நிம்மதியடைந்த ஜெயந்தன் யோக பைரவரைத் தொழுது ஆசி பெற்று தேவலோகம் சென்றடைந்தான்.

அவன் இவ்வாறு சாபம் நிவர்த்தி ஆனது சித்திரை மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமை ஆகும்.ஒவ்வொரு தமிழ்வருடமும் சித்திரை மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமையன்று இங்கே ஜெயந்தன் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில் யோகபைரவப் பெருமான் மாலை நேரத்தில் குதிரைவாகனத்தில் பவனி வருகிறார்.

கன்னி ராசி , ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கே தொடர்ந்து எட்டு ஹஸ்த நட்சத்திர நாளில் வருகை தந்து வழிபட்டு வந்தால்,அவர்களின் ஆத்மா கர்மவினைகள் முழுமையாக நீங்கி பரிசுத்தமடையும்;கடந்த காலத் தவறுகள்,பாவங்களிலிருந்து விலகி நிம்மதியைப் பெறுவார்கள்.
அத்தர்
புனுகு
ஜவ்வாது
சந்தனாதித்தைலம்
பால்
அரகஜா
செவ்வரளிமாலை
மரிக்கொழுந்து
செவ்வாழை போன்ற பொருட்களுடன் கோவில் நிர்வாகத்தின் அனுமதியோடு யோகபைரவரை அபிஷேகம் செய்து அருள்பெறலாம்.ஒன்றுக்கும் மேற்பட்ட ஹஸ்த நட்சத்திரக்காரர்கள் ஒன்று சேர்ந்தும் வழிபாடு செய்யலாம்.இவர்களுக்கு ஹஸ்த நட்சத்திரமும் தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்து வரும் நாளில் அளவற்ற அருளைப் பெறுவர்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ