Sunday, March 16, 2014

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு தந்த மூன்று வரங்கள்!!!





அந்தத் தம்பதி திருமணமான இரவே எதிர்காலத்தில் எப்படி யாரையும் சாராமல் வாழ்வது? என்ற நோக்குடன் இரண்டு மணி நேரம் வரை கலந்துரையாடினர்;முடிவில் இருவருமே தேர்வு எழுதி அரசு வேலையில் சேர்வது என்ற முடிவுக்கு வந்தனர்;திருமணமாகி நான்கு ஆண்டுகள் நகர்ந்தன;இருவருமே விடாப்பிடியாக தொடர்ந்து அரசுத் தேர்வுகள்,வங்கித் தேர்வுகள்,மத்திய அரசுத் தேர்வாணயம் நடத்தும் தேர்வுகளை எழுதிக் கொண்டே வந்தனர்;இருவருமே தனியார்வேலை பார்த்து கொண்டே இப்படி அரசுப்பணியில் சேர முயற்சித்துக் கொண்டே இருந்தனர்;

நான்காம் ஆண்டில் அவர்கள் நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்தித்தனர்;சந்திப்பின் முடிவில்,அவர்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டுமுறையை வீட்டில் செய்யத் துவங்கினர்;அதற்கு பைரவ மஹாசாஸ்த கல்ப வழிபாடு பாகம் 1 புத்தகம் கையேடாக இருந்தது; மிக எளிமையான அந்த வழிபாட்டுமுறையை ஒருநாள் கூடவிடாமல் பின்பற்றி வந்தனர்;

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் படத்தை நம்மிடமிருந்து வாங்கி,பிரேம் போட்டு,வீட்டில் வடக்கு நோக்கி வைத்தனர்;தினமும் அதிகாலையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரைப் போற்றும் சொர்ணபைரவ அஷ்டகத்தை 27 முறை பாடினர்;காலை 4.30 முதல் 5 மணிக்குள் காலைக் கடமைகளை நிறைவேற்றிவிட்டு,கிழக்கு நோக்கி ஒரு மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து,சொர்ணாகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக ஒரு நெய்தீபத்தை ஏற்றி வைத்தனர்;
முதலில் ஓம் கணபதி நமஹ என்று ஒருமுறையும்
பிறகு ஓம் (அவர்களின் குல தெய்வம்) நமஹ என்று ஒருமுறையும் ஜபித்துவிட்டு,
சொர்ணபைரவ அஷ்டகத்தை 27 முறை மனதிற்குள் பாடினர்;இப்படி 27 முறை பாடிட,90 நிமிடங்கள் ஆயின;கணவன்,மனைவி இருவருமே இணைந்து இந்த வழிபாட்டுமுறையை தினமும் பின்பற்றி வந்தனர்;மனைவியானவர் ஒரு மாதத்தில் 27 நாட்கள் வரை வழிபட்டு வந்தார்;வழிபாட்டின் முடிவில் சமையல் செய்துவிட்டு,ஒரு கிண்ணத்தில் சமைத்த உணவை வைத்துக் கொண்டு,அத்துடன் கொஞ்சம் வெல்லத்தூளைச் சேர்த்துவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு படையலாக வைத்துவிட்டு,இருவரும் சாப்பிடும் பழக்கத்தைத் துவக்கினர்;பிறகு,அவரவர் வேலைகளுக்குப்புறப்பட்டனர்;இரவு வீடு திரும்பியதும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் படத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த அந்தப் படையலை எடுத்து,இன்னொரு தட்டில் வைத்து வீட்டின் வெளியே இருக்கும் ஒரு (கவிழ்க்கப்பட்ட) உரல் மீது வைத்தனர்;மறுநாள்,அந்த தட்டைக் கழுவி சுத்தப்படுத்தி,அன்று இரவுக்குப் பயன்படுத்தும் விதமாக வைத்துக் கொண்டனர்;

இப்படியே ஒரு வருடம் ஆனதும்,கணவருக்கு வேறு ஒரு தனியார் நிறுவனத்தின் நேர்காணல் வந்தது;அதில் தேர்வானார்;முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் கிடைத்த சம்பளத்தை விடவும்  அதிக சம்பளத்தில் இங்கே வேலை கிடைத்தது;ரூ.5000/-சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவருக்கு, இங்கே ரூ.8000/-ஆரம்பச் சம்பளமாக உயர்ந்தது.இரண்டு ஆண்டுகள் வரை விடாப்பிடியாக தொடர்ந்து சொர்ண பைரவ வழிபாட்டைப் பின்பற்றிவந்தனர்;மூன்றாம் ஆண்டின் துவக்கத்தில் இன்னொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்;இப்போது இவரது சம்பளம் ரூ.12,000/-ஆக உயர்ந்தது;மூன்றாம் ஆண்டின் முடிவில்,அதாவது சரியாகச் சொல்வதாக இருந்தால்,இரண்டு ஆண்டு ஒன்பது மாதங்கள் ஆன நிலையில்,இவர் அரசு போட்டித் தேர்வின் மூலமாக அரசு ஊழியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்;அதற்கு அடுத்த இரண்டாம் மாதத்தில்,(இரண்டு ஆண்டு,பதினோராம் மாதத்தில்) இவரது மனைவியும் அரசு வேலையில் சேர்ந்தார்;பணியில் சேர்வதற்கான ஆணைகள் கிடைத்ததும்,தம்பதியராக ஐயா சகஸ்ரவடுகர் அவர்களிடம் நேரில் வந்து ஆசி பெற்றனர்.தொடர்ந்து ஒரு நாள் கூட விடாமல் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்வோம் என்று உறுதி கூறிவிட்டு புறப்பட்டனர்;



அந்த குடும்பத்திற்கு ராயல் சுப்பையா குடும்பம் என்ற பட்டம் நான்கு தலைமுறையாக உண்டு;(சுப்பையா என்பது உதாரணத்திற்காக! நிஜப் பெயர் வேறு).பெயரில் ராயல் இருப்பது போல,குடும்பத்திற்கு சகல வளங்களும்,சொத்துக்களும் உண்டு;அந்த தம்பதிக்கு இரு மகன்கள்,ஒரு மகள் இருக்கிறார்கள்.மூன்றாவதாகப் பிறந்த அந்த மகள் பட்டப்படிப்பை முடித்த கையோடு ஆங்கிலத்தில் கதை எழுதும் பழக்கம் உடையவர்;இணையத்தில் எதையாவது தேடிக்கொண்டே இருப்பது அந்த பட்டதாரி எழுத்தாளினியின் வழக்கம்;நமது ஆன்மீகக்கடல் வாசித்ததில் அவருக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யும் எண்ணம் தானாகவே தோன்றியது;பைரவ மஹாசாஸ்த கல்பவழிபாடு பாகம் 1 ஐ வாங்கினார்;
இவர் வாரம் ஒரு கதையை ஆங்கில மாத இதழ்களுக்கு அனுப்புவது வழக்கம்! இந்தப் பழக்கம் இவருக்கு 11 வகுப்பில் இருந்தே இருந்துள்ளது;ஆறு ஆண்டுகளில் இவர் அனுப்பிய எந்த ஒரு கதையும் தேர்வாகவே இல்லை;நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்தால் நமது கதைகள் தேர்வாகி மாத இதழ்களில் வெளிவரும் என்ற நம்பிக்கையில் வழிபாட்டைத் துவங்கினார்.


எந்தக் கோவிலுக்கும் செல்வதையே விரும்பாத தமது மகள் இப்படி திடீரென வழிபாடு செய்யத் துவங்கியது அவளது பெற்றோர்,சகோதரர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது;ஒரு அண்ணன் அடிக்கடி,எழுதி எழுதி போரடிச்சுருச்சா? எப்போ சாமியாரிணி ஆகப் போற? என்று கேலி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.இன்னொரு அண்ணன்,தங்கையின் இந்த போக்கிற்கான காரணத்தை அறிந்து அவன் ஆன்மீகக்கடலை வாசிக்க ஆரம்பித்தான்;ஒரு வருடம் ஆனது.மகளின் வழிபாட்டினால்,குடும்பத்தில் ஒவ்வொருவராக அசைவம் சாப்பிடுவதைக் கைவிடத் துவங்கினர்;ஒரு வருடம் மூன்று மாதங்கள் ஆனதும்,அந்த எழுத்தாளினிக்கு ஒரே நேரத்தில் இரண்டு ஆங்கில மாத இதழ்களில் இருந்து அவரது கதை தேர்வானதாக தகவல் வந்தது;எழுத்தாளினியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை;


இன்னும் உற்சாகத்துடன்,தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வரும் அந்த எழுத்தாளினி,இந்தச் சம்பவத்தை அப்படியே தனது அடுத்த நாவலில் புகுத்த முடிவு செய்திருக்கிறாள்.தற்போது மாதம் ஒருமுறை குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வருகின்றனர்;அட்டவீரட்டானங்களுக்கு குடும்பத்தோடு செல்ல முடிவெடுத்துள்ளனர்;


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த மத்திய அரசு நிறுவனத்தில் இவர் தான் பணி மூப்புஅதிகம் உள்ளவர்;இருந்தும் கூட இவரது ஒரே ஒரு பலவீன சுபாவத்தால் இவரது பதவி உயர்வு தள்ளிப் போய்க் கொண்டேஇருந்தது;இடம் பொருள் பார்த்து பேசத் தெரியாததால்,இவரிடம் பேசவே அனைவரும் பயந்தனர்;வேலை சார்ந்த விஷயத்தைத் தவிர,வேறு எதையும் இவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இவர் அந்த மத்திய அரசு நிறுவனத்தில் தீவு போல வாழ்ந்து வந்தார்;


இந்தச் சூழ்நிலையில்,இவரது நண்பர் ஒருவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டு முறையை பிரிண்ட் எடுத்து இவரிடம் கொடுத்திருக்கிறார்.வாங்கி தனது பைக்குள் வைத்த இவர் ஒரு மாதமாக அதை வாசிக்கவே இல்லை;பேருந்து பயணத்தின் போது பிக் பாக்கெட் அடிக்க முயன்று பணமே இல்லாததால்,அந்த பையை பேருந்துக்குள்ளாகவே வீசி எறிந்துவிட்டுப் போய்விட்டான் அந்த பிக்பாக்கெட் திருடன்.கூட்ட நெரிசல் குறைந்ததுமே தனது தோளில் பையின் கைப்பிடி மட்டும் இருப்பதைக் கண்டு பதறிப்போனார்;தனக்கு எதிராக பேருந்தின் நடக்கும் பகுதியில் தனது பை கிடப்பதைப்பார்த்து,பாய்ந்து போய் எடுத்தார்;உள்ளே எல்லாம் இருக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் போது அந்த பிரிண்ட் அவுட்டை எடுத்து வாசித்திருக்கிறார்.


மறு நாளில் இருந்தே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டைத் துவக்கியிருக்கிறார்.எட்டாவது மாதம் நிறைவடைந்து,ஒன்பதாவது மாதம் துவங்கியதுமே இவரது நிறுவனத்தில் பணி புரிந்த ஒவ்வொருவருக்குமே பணிமாறுதல் ஏற்பட்டது;பதிமூன்றாம் மாதத்தில் இவருடன் பணிபுரிந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு வேறு கிளைகளுக்கு பணிமாறுதல் பெற்றுப் போயிருந்தனர்;பத்தாவது மாதத்தில் இவரது நெருங்கிய நண்பர் ஒருவர் இவரை ஒரு மனோதத்துவ பயிற்சி கருத்தரங்கிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.அங்கே கிடைத்த மனோதத்துவ டெக்னிக்குகள் மூலமாக இவர் தனது இயல்பு சுபாவத்தில் இருந்து மாறத் துவங்கியிருக்கிறார்.தான் உண்டு,தனது வேலை உண்டு என்று இருந்ததால் தான் தான் இடம் பொருள் பார்த்துப் பேசத் தெரியாதவர் என்றபெயர் வாங்கியிருப்பதை உணர்ந்து கொண்டார்;15 ஆம் மாதத்தில் தமது துறையின் தலைமைப் பொறுப்பு(செக்ஷன் மேனேஜர்)க்கு இவரை இவரது தலைமை நிறுவனம் தேர்வு செய்தது;சம்பளமும் இரண்டு மடங்கு அதிகரித்தது;இவரது ஆச்சரியத்திற்கு அளவே இல்லை;ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு  செய்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்று இன்னும் ஆச்சரியப்பட்டு,நமது கழுகுமலை கிரிவலத்திற்கு வருகை தந்தார்;அங்கே இவைகளை நம்மிடம் விவரித்தார்;


நமது நியாயமான கோரிக்கை/ஏக்கங்கள்/நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக நிச்சயமாக அடைய முடியும்.(அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்;மது முதலான போதைப் பொருட்களையும் நிறுத்த வேண்டும்;பிறகே இந்த வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும்).

நமது ஐயா சகஸ்ரவடுகர் அவர்களுடைய ஆசியோடும்,வழிபாட்டின் மூலமாக பலன்கள் பெற்றவர்களின் சம்மதத்தோடும் இந்த பதிவு வெளியிடப்படுகிறது.


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

1 comment:

  1. வழிபாட்டு பயன் அடைந்தோர் மற்றும் அன்றி இத்தனை செய்தியை பரப்பி இவர்களுக்கெல்லாம் பலன் கிடைக்க வழிவகுத்து தந்தது தங்களின் குருநாதரும் உங்களின் ஆன்மீகக்கடல் வலைத்தளமும் தான் . பயன்பெற்றாரால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட தங்கள் வலைத்தளத்திற்கு கிடைத்த பெருமை, நன்று வாழ்த்துக்கள்

    ReplyDelete