Saturday, December 14, 2013

முக்கிய பைரவர் ஸ்தலங்கள்





வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.

திருக்கோஷ்டியூர்: பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்
பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்
இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர்.

பைரவபுரம்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெண்பாக்கம் அருகில் உள்ளது பைரவபுரம். ஸ்வர்ண கால பைரவர் கோயில் இங்கே உள்ளது.

சிவபுரம்: இது கால பைரவ ÷க்ஷத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோயிலாக விளங்குகிறது. இத்தலம் கும்பகோணம் -சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

எமனேஸ்வரம்: எமனேஸ்வரமுடையார் கோயிலில் பைரவர் அருள்பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

காளையார் கோயில்: இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார். இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திருநாகை: நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.

மதுரை: இங்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும்,  கீழ ஆவணி மூல வீதி புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர். மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோயிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது. இது போன்ற அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது.

திருவண்ணாமலை: இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.

திருமயம்: இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.

பொன்னமராவதி புதுப்பட்டி: இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

சேந்தமங்கலம்: இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் காணப்படுகிறார். எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு திருஉருவமாகும்.

முறப்ப நாடு: எந்தக் கோயிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார். ஆனால் முறப்ப நாடு கோயிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை கால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர பைரவர் என்றும் கூறுகின்றனர். இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவாஞ்சியம்: தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். எனவே இவர் ஆசன பைரவர் என அழைக்கப்படுகிறார். யம பயம் நீக்கும் தலம்.

திருச்சேறை: கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.

திருப்பாச்சேத்தி: மதுரை - ராமேஸ்வரம் சாலையில்  உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். ஒரு நாய் நின்ற கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

நாகை: இங்கு சம்ஹார பைரவராக தெற்கில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணம்: வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து பைரவர்களாக எழுந்தருளி பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்கிறார்கள். ஐந்து பைரவர்களை ஒரே நேரத்தில் வழிபடலாம்.

காளஹஸ்தி: இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி தடையின்றி நடைபெறும்.

பழநி: அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.

சீர்காழி: சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும். சீர்காழிக்கு செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் பைரவர்களை வழிபட்டு இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய கால பைரவரை வணங்கி பயன் பெறலாம்.

சேலம்: இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளால் யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார். மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காசி கால பைரவரையும் தரிசிக்கலாம்.

திருவான்மியூர்: சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன.

இலுப்பைக்குடி: இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர். இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

அந்தியூர்: ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோயிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோயிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார். சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.

திருவியலூர் (திருவிசநல்லூர்): கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் உள்ளனர்.
நன்றி: http://bairavarvazhibaadu.blogspot.in/2011/05/1.html

Monday, December 9, 2013

அடுத்த தலைமுறைக்கும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்கும் ஆன்மீக அரசு!!!

தனி மனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால்,அவர்களின் குடும்ப நிலை உயரும்;குடும்பங்களின் நிலை உயர்ந்தால் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலை உயரும்;நிறுவனங்களின் நிலை உயர்ந்தால் ஒரு நாட்டின் நிலை உயரும் என்று  சுவாமி விவேகானந்தர் உரைத்திருக்கிறார்.

25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருந்து,பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் நிம்மதி ஒளியேற்றியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!
இவரது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகள் இன்று பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கர்மவினைகள் நீங்கக் காரணமாக அமைந்திருக்கின்றன;
இவரது எளிமையான செயல்பாடுகள்,சராசரி மக்களுக்கு ஆன்மீகம் பற்றிய உண்மைகளை உரைக்கின்றன;இவரது ஆன்மீக ஆலோசனைகளை சிறிதும் மாறாமல் பின்பற்றியவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே தமது பல வருட சிக்கல்களிலிருந்து மீண்டுள்ளனர்.

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் ஒவ்வொரு நொடியுமே வாழ்க்கைச் சிக்கல்கள்  தோன்றிக் கொண்டே இருக்கின்றன.வெறும் செல்வாக்கினாலோ(அரசியல் செல்வாக்கு,அரசுப்பணி செல்வாக்கு,ஜாதி செல்வாக்கு,குடும்பப்பெருமை செல்வாக்கு),பண பலத்தினாலோ,அளவற்ற புத்திசாலித்தனத்தினாலோ எதிர்வரும் சிக்கல்கள்,பிரச்னைகளை எவராலும் முழுமையாக எதிர்கொள்ள முடியாது என்பது நிதர்சனம்.அப்படிப்பட்டவர்களுக்கு முறையான மற்றும் சரியான ஆன்மீக வழிகாட்டி நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்(9677696967)

பொருளாதார நெருக்கடி,முன் ஜன்ம கர்மவினை,முன்னோர்கள் கர்மவினை,குடும்பக் குழப்பம்,உறவாடிக் கெடுப்பவர்களின் நயவஞ்சகம்,உறவினர்கள் செய்யும் நிழலான சதிகள்,கணவன் மனைவிக்குள் உருவாகும் உறவுச் சிக்கல்கள் போன்றவைகளுக்கும்,
ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற விரும்புவோருக்கும்,ஆன்மீக முன்னேற்றங்களில் பல படிநிலைகள் இருக்கின்றன;ஒவ்வொரு நிலையில் ஏற்படும் தடுமாற்றம் அல்லது சந்தேகங்களுக்கும் இவரது ஆலோசனைகள் சரியாகவே இருக்கின்றன.

தமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்து வரும் பலர் முற்பிறவிகளில் சித்தராகவோ,சித்தர்களின் சீடராகவோ இருந்துள்ளனர்.அவர்களின் கர்மவினைகள் தீர்ந்து மீண்டும் உயர்ந்த வாழ்க்கை வாழ விரும்புவோருக்கும் சரியான வழிகாட்டியாக நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் திகழுகிறார்.

இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் கடந்த சில ஆண்டுகளாக எனது அனுபவத்தில் கண்ட உண்மையே! நீங்கள் உங்கள் வாழ்க்கைச் சிக்கல்கள் தீரவும்,நீங்கள் விரும்பும் லட்சியத்தை அடையவும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை ஒருமுறை நேரில் சந்தித்தப்பின்னரே இந்த உண்மையை உணரமுடியும்.

ஐயா அவர்களின் அதிகாரபூர்வ இணைய தளங்கள்:            ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீகக்கடல்
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

பூமியில் நவக்கிரக வழிபாடு தோன்றிய புராணம்

நான்கு யுகங்களில் நான்காவது யுகமான கலியுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்;முதல் யுகமான கிருத யுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது; நம்மோடு இறைசக்தி வாழ்ந்து வந்தது;தர்மதேவதை என்ற பசுவுக்கு நான்கு கால்கள் இருந்தன;அதர்மம் என்பதே இல்லை;
இரண்டாவது யுகமான திரோதாயும் 12,96,000 ஆண்டுகளை தனது ஆயுளாகக்கொண்டது; இந்த யுகத்தில் தர்மதேவதை என்ற பசுவுக்கு மூன்று கால்களாகக் குறைய அதர்மம் பூமியில் படர ஆரம்பித்தது;இறைசக்தி பூமியில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்பட்டது.

மூன்றாம் யுகமான துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகளைக் கொண்டது;தர்மதேவதை இரண்டு கால்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்தது;இறை சக்தியை மிகவும் வருந்தி அழைத்தால் மட்டுமே வான் உலகில் இருந்து பூமிக்கு வந்தது;கோவில்கள் தோன்றின;அதர்மத்தின் ஆட்சிகள் உருவாகின;

நான்காம் யுகமான கலியுகம் 4,32,000 ஆண்டுகளை தனது ஆயுளாகக் கொண்டது;இதுவே நாம் வாழும் கலியுகம் ஆகும்.நாம் தற்போது கலியுகம் துவங்கி 5114 ஆம் ஆண்டில் வாழ்ந்து வருகிறோம்.பணம்,காமம் இந்த இரண்டின் வடிவில் அதர்மம் பூமியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.தர்மம் என்ற பசுவானது ஒற்றைக் காலில் நிற்கமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.மனித மனங்களில் அவநம்பிக்கை(யாரையும், எப்போதும், எதற்காகவும் நம்பாத மனோபாவம்),காம நோக்கிலோ அல்லது லாப நோக்கிலோ ஒருவரை ஒருவர்  அணுகுவது;எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனோபாவத்துடன் இருப்பவர்களை துன்புறுத்துவது அல்லது அவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு தனது சுயலாபங்களை மட்டுமே கணக்கிட்டு பிறரிடம் பழகுவது என்று மானுட வாழ்க்கை இருந்து வருகிறது.கலியுகம் செல்லச் செல்ல அன்பு,விட்டுக்கொடுத்தல்,பரிந்து பேசுதல்,இரக்கம்,எல்லோருக்கும் உதவுதல்,பொறுமை,தியாகம்,தானே தவறுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுதல்,தெய்வ நம்பிக்கை,குரு நம்பிக்கை போன்ற நற்குணங்கள் அருகிப் போய்விடும்;

இந்த சூழ்நிலையில்,நாம் வாழ்ந்து வரும் கர்மபூமியானது இது வரையிலும் ஆறு முறை அழிவினை சந்தித்திருக்கிறது.முதல் முறை அழிவினை சந்தித்தப் பின்னர்,மீண்டும் இந்த பூமி உருவான போது நவக்கிரக அதிபதிகளான சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன்,சனி,ராகு,கேது = இவர்கள் அனைவரும் காலத்தை இயக்கிவரும் சிவ அவதாரமான பைரவப் பெருமானிடம் ஒன்றாகச் சென்று முறையிட்டன.
பூமியில் வாழ்ந்து வரும் மனிதர்கள் தம்மை வழிபடுவதில்லை;அவ்வாறு வழிபட்டால் தான் அவர்களின் கர்மவினைக்கேற்ப தர வேண்டியபலன்களை வழிபாட்டுக்கேற்றவாறு அதிகரித்தோ,குறைத்தோ தர முடியும் என்று வேண்டின;

அவர்களின் கோரிக்கையை ஏற்ற காலபைரவப் பெருமான் தன் மீது அர்ச்சிக்கப்பட்ட  செவ்வரளி மற்றும் மரிக்கொழுந்து மலர்களை நவக்கிரகங்களின் மீது  தூவி ஆசி வழங்கினார்.அந்த கணத்தில் இருந்து பூமியில் பஞ்சாங்கமும்,பஞ்சாங்கத்தின் மூலமாக ஜோதிடக்கலையும் தோன்றியது.ஜோதிடக்கலையால் பரிகாரமும் உருவானது;
நீங்கள் அனைவரும் காவிரிக்கரையோரம் லிங்கப் பிரதிஷ்டை செய்து வாருங்கள்;தகுந்த காலம் வந்ததும்,உங்களை மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வழிபட வருவார்கள்;

என்று அருளுரை வழங்கினார்;நவக்கிரகங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பூமியில் நமது பாரத தேசத்திற்கு வந்தன;தமிழ்நாட்டில் காவிரிக்கரையோரம் அவை சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தன.

சூரிய பகவான் இன்றைய சூரியனார் கோவில் என்ற இடத்திலும்
சந்திரன் இன்றைய திங்களூர் என்ற இடத்திலும்
செவ்வாய் இன்றைய வைத்தீஸ்வரன் கோவில் என்ற இடத்திலும்
புதன் இன்றைய திருவெண்காடு என்ற இடத்திலும்
குருபகவான் வியாழசோமேஸ்வரர்(கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்குஅருகில்) என்ற இடத்திலும்
சுக்கிரபகவான் இன்றைய கஞ்சனூரிலும்
சனி பகவான் இன்றைய திருநள்ளாறு என்ற இடத்திலும்
ராகு பகவான் இன்றைய திருநாகேஸ்வரம் என்ற இடத்திலும்
கேது பகவான் இன்றைய கீழப்பெரும் பள்ளம் என்ற இடத்திலும் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தன.அவை காலப்போக்கில் நவக்கிரக ஸ்தலங்களாக நம்மால் நம்பப்பட்டு பரிகாரத்திற்குரிய கோவில்களாக ஏற்கப்பட்டன.

எந்தக் கிரகத்தினால் நாம் சிரமப்படுகிறோமோ,அந்த நாளில் நாம் பைரவப் பெருமானை வழிபட்டால் அந்தக் கிரகத்தினால் ஏற்படும் துயரங்கள் நீங்கும்.இந்தக் கருத்தின் அடிப்படையில் அடுத்து ஏராளமான பதிவுகள் வெளிவர இருக்கின்றன.

இந்த தெய்வீக ரகசியத்தை நமக்காக வெளிப்படுத்தியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஆவார்.அவருக்கு நாம் கூகுள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

பூரம் நட்சத்திர ஜாதகர்கள் வழிபட வேண்டிய பட்டீஸ்வர பைரவர்!!!



மூர்த்தி,தலம்,தீர்த்தம் இம்மூன்றினாலும் சிறப்பு பெற்றது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் ஆகும்.பராசக்தியே தவம் செய்து வழிபட்டது இங்கேதான்! காமதேனுவின் புத்திரி(மகள்) பட்டியால் பூசிக்கப்பெற்றது.மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்தில் உள்ள ஞானவாவியின் துளிபட்டமையால் சாப நிவர்த்தி ஆனது.காம்பீலி நகரத்து அரசன் சித்திரசேன மகாராஜா புத்திரகாமேஷ்டி யாகம் செய்து குழந்தை வரம் பெற்றதும் இங்கே தான்!

சக்தியும்ன மகாராஜாவுக்கு ஞானதீர்த்தத்தில் நீராடிய மகிமையாலும்,கிளியின் பஞ்சாட்சர உபதேசத்தாலும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதும் இங்கேதான்!விஸ்வாமித்திர மகரிஷிக்கு காயத்ரி மந்திரம் சித்தியானது இங்கேதான்.அவ்வாறு சித்தியாகி பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இங்கேதான்.

ஹனுமனால் கொண்டுவரப் பட்ட லிங்கத்தை ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்து தன் வில்லின் முனையால் கோடி தீர்த்தம் என்னும் கிணற்றை தோற்றுவித்து அந்நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சாயாஹத்தி தோஷம் நீங்கியதும் இந்த தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தான்! 

திருஞான சம்பந்தருக்கு வெயிலின் வெப்பம் தணிய இறைவனால் முத்துப்பந்தல் அளிக்கப்பட்டது.முத்துப்பந்தலின் நிழலில் வருவதைக் காண நந்திதேவரை விலகியிருக்கும் படி கட்டளையிட்டார்.அதன் அடையாளமாக எல்லா நந்திகளும் விலகியிருக்கின்றன;இவ்வாறு திருப்பூந்துருத்தியிலும் திருஞானசம்பந்தருக்காக நந்தி விலகியுள்ளது.திருப்புன் கூரில் நந்தனாருக்குக் காட்சி கொடுப்பதற்காக பெருமான் அருளால் நந்தி விலகியுள்ளது.திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்றது.

பராசக்தி தனித்து தவம் செய்வதற்காக இங்கே வந்து ஒரு வனத்தை உருவாக்கினாள்.தேவர்கள் அனைவரும் இங்கே வந்து மரம்,செடி,கொடிகளின் உருவெடுத்து அன்னை பராசக்திக்கு பக்கபலமாக இருந்தார்கள்;காமதேனு தனது மகளான பட்டியை அனுப்பி வைத்தது.பட்டி பராசக்திக்கு பணிவிடை செய்தது;பராசக்தியின் தவத்தினால் மெச்சி சிவபெருமான் தமது சடைமுடியுடன் காட்சியளித்தார்.இதனால் இங்கே அவருக்கு சுபர்தீஸ்வரர் என்ற பெயர் உண்டானது.

பராசக்திக்கு சிவபெருமான் அருள்வழங்கியதை கண்ணுற்ற பட்டி தானும் அதே போல சிவ அனுக்கிரகம் பெற விரும்பியது;இந்த ஸ்தலத்தின் பெருமைகளை உணர்ந்ததால்  இங்கேயே மணலால் ஒரு லிங்கம் அமைத்து,தினமும் ஆகமவிதிப்படி பூஜை செய்து வந்தது.தனது பாலைக் கொண்டும்,ஞானவாவியின் நீரைக்கொண்டும் தினமும் வழிபட,பெருமகிழ்ச்சியடைந்த சிவபெருமான் அந்த மணல் லிங்கத்தை நிலையான லிங்கமாக உருமாற்றினார்.பராசக்தி இங்கே வந்து தவம் செய்தமையால் தேவி வனம் என்றும்,பட்டிக் கன்று வழிபட்டதால் பட்டீஸ்வரம் என்றும் இந்த இடத்தின் பெயர் மாறியது.தேனுபுரீஸ்வரருக்கு பட்டீஸ்வரர் என்ற பெயர் உருவானது.

மேலே கூறிய அத்தனை சம்பவங்களிலும் சிவபெருமானிடம் இருந்து வரங்களை வாங்கித் தந்தவரே பட்டீஸ்வர பைரவப் பெருமான் ஆவார்.
பட்டீஸ்வரம் கும்பகோணத்தில் இருந்து தென் மேற்கே 8 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கிறது.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

மகம் நட்சத்தினர் வழிபட வேண்டிய வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பைரவப்பெருமான்!!!



மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய பைரவர் ராயவேலூர் நகரில் அமைந்திருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவிலினுள் இருக்கிறார்.
இந்த பைரவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு,சப்தரிஷிகளால் வழிபாடு செய்யப்பட்டவர்;சித்தர்களின் தலைவர் அகத்தியர்,கவுதமர்,ப்ரத்வாஜர்,வால்மீகி,காஸ்யபர்,அத்திரியார்,வசிட்டர் போன்றவர்களால் வேலூருக்கு கிழக்கே உள்ள பகவதி மலையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து பல்லாண்டுகளாக பூஜையும்,தவமும் செய்து வந்தனர்.வழிபாட்டின் நிறைவாக,மற்ற முனிவர்கள் வேறு இடத்திற்குச் சென்றுவிட்டனர்.அத்திரி மகரிஷி மட்டும் வேலூரிலேயே சில காலம் தங்கி வேறொரு சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபாடு செய்துவிட்டு,அவரும் சென்றுவிட்டார்.இதனால்,கவனிப்பாரின்றி பல ஆண்டுகளாக சிவலிங்கம் இருக்கும் அவலநிலை உண்டானது.அந்த சிவலிங்கத்தைச் சுற்றி புற்று உருவாகி சிவலிங்கத்தையே மறைத்துவிட்டது.

பிற்காலத்தில் கோதாவரி நதிக்கரையில் இருந்த பத்ராச்சலம் என்ற ஊரில் பிறந்த பொம்மி,திம்மி என்ற இருவரும் இந்த சிவலிங்கத்தை பிரதிட்டை செய்தனர்.கூடவே,ஜலகண்டேசுவர பைரவரை வேலூர் ஆலயத்தில் பிரதிட்டை செய்தனர்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,முதலில் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவேண்டும்;பிறகு, தமது ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இங்கே அமைந்திருக்கும் பைரவப் பெருமானுக்கு அபிஷேகமும்,அர்ச்சனையும் செய்ய வேண்டும்.வழிபாடு நிறைவடைந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்குச் செல்லாமலும்,பிறர் வீட்டிற்குச் செல்லாமலும் நேராக அவரவர் சொந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி மாதம் ஒரு ஜன்ம நட்சத்திர நாள் வீதம் எட்டு ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு வழிபாடு செய்தாலே போதுமானது;நமது வாழ்நாளில் இருந்து வந்த சகலவிதமான கர்ம வினைகளும் முழுமையாக விலகிவிடும்;

அபிஷேகத்தில் இருக்க வேண்டிய முக்கியப் பொருட்கள்:
அத்தர்
புனுகு
ஜவ்வாது
சந்தனாதித்தைலம்
பசும்பால்(முடியாவிட்டால் பாக்கெட் பால்)குறைந்தது ஒரு லிட்டர்
செவ்வரளி மாலை
மரிக்கொழுந்து உதிரியாக
வில்வம்
பழரசம்

முடிவில் சந்தனக்காப்பு செய்வது பைரவ அருளை விரைவாகக் கிடைக்கச் செய்யும்.அரகஜா,புனுகு,கஸ்தூரி,பச்சைக் கற்பூரம்,கோரோசனை கலந்த சந்தனக்காப்பு செய்வதால் பைரவப் பெருமானின் அன்புக்கும்,அருளுக்கும் முழுப்பாத்திரமாக நம்மால் முடியும்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கூகுள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

பைரவப்பெருமானுக்குப் படையல்:
அவல் பாயாசம்
வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மிளகுவடை
வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கல்
தேன்
நெய்யில் சமைக்கப்பட்ட உளுந்துவடை
சம்பா அரிசிச் சாதம்
பால்
இவைகளில் ஏதாவது ஒன்றை ஒவ்வொரு ஜன்ம நட்சத்திர நாளன்றும் தயார் செய்து பைரவப் பெருமானுக்குப் படையல் இட வேண்டும்;அபிஷேகமும்,அர்ச்சனையும் நிறைவடைந்தப்பின்னர்,அங்கே வந்திருப்பவர்களுக்குப் பகிர்ந்து தர வேண்டும்;நாமும் சாப்பிடலாம்;வீட்டிற்கும் கொண்டு சென்று நமது குடும்பத்தாருக்கும் தரலாம்.

வசதியுள்ளவர்கள் ஒவ்வொரு ஜன்ம நட்சத்திர தினத்தன்றும் இவைகள் அனைத்தையும் படையல் இட்டு அபிஷேகம் செய்யலாம்;மனப்பூர்வமாகச் செய்யும் வழிபாடுதான் இங்கே பைரவரின் கவனத்திற்குச் செல்லும்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ